கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த ஸ்டேன் ஸ்வாமியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பேசியதாகவும், பூமி தாயை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 18 ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்றே நடைபெற்றது. சட்டவிரோதமாக கூட்டம் நடைபெறவில்லை. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 20 ஆம் தேதி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளேன்.
இதயநோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன், வயது முதிர்வாகவும் இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என கேடடுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜார்ஜ் பொன்னையா திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
அதேபோல் அவர் மீண்டும் அரசியல் தலைவர்களையோ அல்லது மத ரீதியாகவோ பேச மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து பேனர் கிழிப்பு