ETV Bharat / state

அங்கன்வாடி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் கோயில் கட்ட முயற்சி - குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு - அங்கன்வாடி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் கோயில் கட்ட முயற்சி

அங்கன்வாடி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் விநாயகர் கோயில் கட்ட முயற்சி நடப்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
author img

By

Published : Feb 24, 2022, 10:59 PM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு, அண்ணாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, இப்பகுதியில் அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், அப்பகுதியில் உள்ள சிலர் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏழை குழந்தைகள் படிப்பதற்காக அங்கன்வாடி கட்டடம் கட்டினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், முறையான அனுமதி இல்லாமல் இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்டடம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் கோயில் கட்ட முயற்சி

இதுகுறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, விநாயகர் கோயிலுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு அப்பகுதியில் அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், என்ன கட்டடம் கட்டப்பட்டுள்ளது? யாருடைய இடம்? கட்டடம் கட்டுவதற்கு யார் அனுமதி அளித்தது? தற்போது இடத்தின் நிலை என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.

மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

அங்கன்வாடி கட்டடம் கட்டுவதன் மூலம் ஏழை குழந்தைகள் பயன்பெற முடியும். மனுதாரர் தரப்பில் 2011இன் படி அப்பகுதியில் மக்கள் தொகை எவ்வளவு உள்ளனர்? வறுமைக்கோட்டிற்குக்கீழ் எவ்வளவு மக்கள் உள்ளனர்? அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர்? என்பது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் தொடர்ந்து பயணம்: கடுப்பான தெற்கு ரயில்வே நிர்வாகம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.