மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ளது எம். கல்லுப்பட்டி சாணார்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த மொக்கேட்டு என்பவரது மகன் வெற்றிப்பாண்டி (22). பிளஸ் 2 முடித்தவுடன் பாதுகாப்புப் படையில் சேர விரும்பி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வெற்றிப்பாண்டி இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு பாதுகாப்புப் படையிலிருந்து தகவல் வந்தது. இதையடுத்து வெற்றிப்பாண்டியின் ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இறந்த வெற்றிப்பாண்டிக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
வெற்றிப்பாண்டி ராணுவத்தில் பனிப்பொழிவில் சிக்கி இறந்தாரா அல்லது உடல்நிலை சரியின்மைக் காரணமாக இறந்தாரா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. வெற்றிப்பாண்டியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 16 பேர் கொடூரக் கொலை, மிரட்டும் தெலங்கானா நகைத் திருட்டு வழக்கு!