மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழகுயில்குடி பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு தூத்துக்குடியில் உள்ள ஆறுமுகச்சேரி என்ற பகுதியிலிருந்து மோகன் என்பவரது மகன் பொன்ராஜ் என்ற மாணவன் எம்பிஏ இரண்டாம் ஆண்டு, கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்துவருகிறார்.
நாளை முதல் (டிசம்பர் 22) ஜனவரி 1ஆம் தேதிவரை அரசு விடுமுறை அளித்திருந்த நிலையில் இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்ராஜின் தந்தை மோகன் மரணம் அடைந்தார். இந்தச் செய்தி தொலைபேசி வாயிலாக வந்துள்ளது.
இதைக்கேட்ட மனமுடைந்த பொன்ராஜ் தன்னுடன் தங்கியிருந்த பிற மாணவர்களை ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு தான் பின்னால் வருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் பொன்ராஜ் திடீரென்று தன் கையை பிளேடால் கிழித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்து நாகமலை புதுக்கோட்டை காவல்து றையினர், பொன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணையை செய்துவருகின்றனர்.
இதையும் படியுங்க: கல்குவாரியில் குதித்த இளைஞர் சடலமாக மீட்பு!