உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவிலும் 29 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆலோசனைக் கூட்டமானது விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன், மதுரை மாநகராட்சி முதன்மை சுகாதாரத்துறை அலுவலர் பிரியா ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விமான நிலைய அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிட்டல் முறையில் திரையிடப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இதுதவிர மதுரை விமான நிலையத்தில் மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கொரோனாவைத் தடுக்க கைகளை சோப்பிட்டு கழுவச் சொல்லுங்க' - ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுரை