ETV Bharat / state

ஆதீன மடத்தில் இந்து அமைப்புகளின் தலையீடு எனும் குற்றச்சாட்டு குறித்து கவலை இல்லை - மதுரை ஆதீனம்! - மதுரை ஆதீன மடம்

மதுரை ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதைப் பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும்; அதை கண்டுகொள்ளப்போவதில்லை என மதுரை ஆதீனம் விளக்கமளித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மதுரை ஆதீனம்

author img

By

Published : May 9, 2022, 5:08 PM IST

மதுரை: தருமபுரம் ஆதீன மடத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களைப் பாதுகாக்க வேண்டும். அனைவரையும் அனுசரித்துப்போக வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன்.

பட்டினப் பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில் அதை சர்ச்சையாக்கி, இப்போது உலகறியச் செய்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துகளும். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார். இனிமேல் சொல்லமாட்டார். ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ளப்போவதில்லை.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மதுரை ஆதீனம்

முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின்போது அவற்றுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் அறநிலையத்துறை அலுவலர்களே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அரசுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்புத் தரிசன கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

மேலும், சந்நியாசி தர்மங்களை ஆதீனங்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என எம்.பி. சு.வெங்கடேசன் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “சந்நியாச தர்மங்களை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன்” என்றார். தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு குறித்த கேள்விக்கு, “ஒன்றிய அரசு பாதுகாப்பு அளிக்கும்” என்றார்.

இதையும் படிங்க: திமுக ஆன்மீக அரசு என்று நான் சொன்னதை முதலமைச்சர் ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளார் - தருமபுரம் ஆதீனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.