ETV Bharat / state

விபத்தில் மகள் உயிரிழப்பு: ஆதரவின்றி திரிந்த மூதாட்டிக்கு உதவிய தன்னார்வலர்கள்

மதுரை: சாலை விபத்தில் தனது மகளை இழந்த 70 வயது மூதாட்டி ஆதரவின்றி சாலையில் திரிந்ததைக் கண்ட தன்னார்வலர்கள் அவரை மீட்டு முதியோரைப் பராமரிக்கும் முகாமில் சேர்த்தனர்.

madurai abandoned old woman saved by Volunteers

author img

By

Published : Jun 27, 2020, 6:59 AM IST

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவர் தனது மகளோடு அதே பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக வசித்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாளின் மகள் சாலை விபத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்பிற்குப் பின்பு ஆதரவு கொடுப்பார் யாருமின்றி வள்ளியம்மாள் வறுமையில் வாடினார்.

madurai abandoned old woman saved by Volunteers
மூதாட்டி வள்ளியம்மாள்

வள்ளியம்மாளைப் பராமரித்துப் பாதுகாப்பதற்கு உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில், ஜெய்ஹிந்துபுரத்தின் பல்வேறு பகுதிகளின் சாலையோரங்களில் மாதக்கணக்கில் வள்ளியம்மாள் இருந்துவந்துள்ளார். தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தங்குவதற்கு இடமின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகினார்.

ஆதரவு இன்றி தவிக்கும் மூதாட்டி

இது குறித்து தகவலறிந்த சில தன்னார்வலர்கள் தனியார் அறக்கட்டளை மூலமாக வள்ளியம்மாளை மீட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டுவந்தனர். தேவையான நிவாரணப் பொருள்களை வள்ளியம்மாளுக்கு வழங்கினர்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தற்போது முதியோரைப் பராமரிக்கும் தனியார் முகாமில் வள்ளியம்மாள் சேர்க்கப்பட்டார். தன்னலம் கருதாது இந்தச் சேவைப் புரிந்த தனியார் அறக்கட்டளைக்கும், அதன் தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... கமலாத்தாள் பாட்டிக்கு குவியும் ஆதரவு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.