ETV Bharat / state

திருச்சி குகைக் கோயிலுக்கு ஆபத்து? கட்டுமானங்களை அகற்ற நீதிமன்றம் ஆணை!

author img

By

Published : Nov 25, 2022, 4:20 PM IST

திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கும் கட்டுமானங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

malaikottai cave temple  cave temple  Trichy malaikottai  Trichy malaikottai cave temple  high court madurai branch  high court  madurai  madurai latest news  trichy  பல்லவர் குகைக் கோயில்  திருச்சி மலைக்கோட்டை  மலைக்கோட்டை  திருச்சி  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  உயர்நீதிமன்ற மதுரை கிளை  குகைக் கோயில்  மலைக்கோட்டை குகைக் கோயில்  குகை கோயிலுக்கு பாதிப்பு
மலைக்கோட்டை குகைக் கோயில்

மதுரை: திருச்சி மலைக்கோட்டை குகைக் கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை சேர்ந்த சவுந்தராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், ”திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகை கோயில் உள்ளது. இந்த குகை கோயிலை ஒட்டி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே குகை கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “பல்லவர் குகை கோயில் அருகே உள்ள இடம் ரோசன் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குடோன் கட்டியுள்ளார். அதனால் குகைக் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் நாட்டின் கலாச்சாரம், கலை, பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பல்லவர் குகைக் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆய்வில் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: பெண் மனுதாரரிடம் மன்னிப்பு கோரிய உயர் நீதிமன்றம்.. பாகப்பிரிவினை வழக்கில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.