தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த வீராச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா ஆதிதிராவிடர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பொது மக்களிடம் நிதி திரட்டி ஒரத்தநாடு புதிய நீதிமன்றத்திற்கு முன்பாக டாக்டர் அம்பேத்கருக்கு வெண்கலத்தில் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்துள்ளோம். மேலும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றியே அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. எனவே, டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு வெண்கலத்தில் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்திற்குள் பரிசீலனை செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.