மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரிடமிருந்து காவல்துறையினர் முறையற்ற ரீதியில் பயன்படுத்துவதாக கூறி 5 வலி நிவாரண மாத்திரைகளும், சிரிஞ்சுகளும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். .
இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் ஜெயராமனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதன்பின்பும் ஜெயராமன் மீண்டும் அதே குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதால் அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தனக்கு மீண்டும் ஜாமீன் வழங்கக்கோரி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி," மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரை வலி நிவாரணியாக மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் போதைக்காக பயன்படுத்தியுள்ளார்.
ஆகவே இது போன்ற மருந்துகள் எளிதாகக் கிடைப்பதைத் தவிர்த்து, அவை வழங்கப்படுவதை முறைப்படுத்த வழிகாட்டுதல் பிறப்பிக்க வேண்டும். மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் உதவியாளர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அதுபோன்ற மருந்துகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்துவதை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மனுதாரர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உடல் வலி நிவாரண மாத்திரையில் போதை - விற்பனை செய்த இருவர் கைது