ETV Bharat / state

'ஒழுக்கமற்றத் தன்மையால் பிரிந்து வாழ்பவருக்கு கணவரின் ஓய்வூதியம் கிடையாது' - ஓய்வூதியம் பலன்கள்

மதுரை: ஒழுக்கமற்றத் தன்மையால் கணவனைப் பிரிந்து வாழும் மனைவிக்கு கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெறத் தகுதி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Sep 19, 2020, 8:27 PM IST

அரசு ஊழியராகப் பணியாற்றிய தேவசகாயம் என்பவர் 2011ஆம் ஆண்டு இறந்தார். இவர் முதலில் மேரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியின் நடத்தை சரியில்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விட்டுப் பிரிந்துவாழ சட்டப்படி நீதிமன்றத்தில் 1988ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றார்.

பின்னர், ராணி என்பவரை 1989ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், தேவசகாயம் மரணமடைந்ததால், ஓய்வு ஊதிய பணப்பலன்கள், குடும்ப ஓய்வு ஊதியம் உள்ளிட்டவற்றைக் கேட்டு இரண்டாவது மனைவி ராணி விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பத்தைப் பரிசீலித்த முதன்மைப் பொதுக் கணக்காளர், குடும்ப ஓய்வு ஊதியம் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

ஆனால், இரண்டாவது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களும் ஓய்வூதியம் பலன்களைப் பெறத் தகுதியானவர்கள் என்றும் ஓய்வூதிய தொகையை மூன்றாகப் பிரித்து, முதல் மனைவி மேரிக்கு ஒரு பங்கும், இரண்டாவது மனைவி மூலம் பிறந்த இரண்டு மகள்களுக்கு தலா ஒரு பங்கும் என்று வழங்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், "நீதிமன்றம் மூலம் கணவன் மனைவி சட்டப்படி பிரிந்துவாழ அனுமதி பெறுவது என்பது வேறு, விவாகரத்துப் பெறுவது என்பது வேறு.

இந்த வழக்கில் தேவசகாயம் சட்டப்படி பிரிந்து வாழத்தான் நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளார். இதை விவாகரத்தாக கருத முடியாது.

அதனால், மனுதாரர் ராணிக்கும், மறைந்த அரசு ஊழியர் தேவசகாயத்துக்கும் நடந்த திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை. இதனால், மனைவி என்ற அந்தஸ்தை மனுதாரர் பெற முடியாது.

இதனடிப்படையில், இரண்டாவது மனைவியான மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என்று முதன்மை பொதுக் கணக்காளர் உத்தரவிட்டது சரிதான். அதேநேரம், நீதிமன்றம் மூலம் சட்டப்படி பிரிந்து வாழ உத்தரவு பெற்ற மனைவி தன்னுடைய கணவனின் ஓய்வு ஊதியம் பெற தகுதியானவர்தான். ஆனால், ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்துக்காகப் பிரிந்து வாழும் உத்தரவைப் பெற்றிருக்கக் கூடாது.

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படி, ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்த மனைவி, கணவனின் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர் இல்லை.

இந்த வழக்கில் முதல் மனைவி ஒழுக்கமற்ற நடத்தையின் காரணத்தினால், அவரிடமிருந்து சட்டப்படி பிரிந்து வாழ நீதிமன்றத்தில் தேவசகாயம் உத்தரவு பெற்றுள்ளார். எனவே, ஒழுக்கமற்ற மனைவி, ஓய்வூதியம் பெறத் தகுதியானவர் இல்லை.

அதனால், ஓய்வூதியத்தை மூன்று பங்காகப் பிரித்து வழங்கும் உத்தரவை ரத்துசெய்கிறேன். இந்த வழக்கில் ஒழுக்கமற்ற முதல் மனைவியும், சட்டப்படி விவாகரத்து பெறாதவரை திருமணம் செய்ததால் இரண்டாவது மனைவியும், அதாவது இருவருமே குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியானவர் இல்லை என்று முடிவுசெய்கிறேன்.

அதேநேரம், மறைந்த அரசு ஊழியரின் ஓய்வு ஊதிய பலன்கள் அனைத்தையும், இரண்டாவது மனைவியின் மூலம் பிறந்த 2 மகள்களுக்குச் சரிசமமாகப் பிரித்து வழங்க உத்தரவிடுகிறேன்" எனத் தீர்ப்பு வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.