ETV Bharat / state

ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படாது - சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பேருந்து நிலையம் அருகில் இயங்கும் டாஸ்மாக் (Tasmac) கடையை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (madras High Court madurai bench) உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU
author img

By

Published : Nov 15, 2021, 6:38 PM IST

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவி கிருபா சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், " மெஞ்ஞானபுரம் பேருந்து நிலையம் அருகில் பஜாரின் மையப்பகுதியில் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனைக் கடை இயங்கிவருகிறது. இந்தக் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினசரி பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக மது அருந்துபவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

இதனால் பொது மக்கள் மது விற்பனை கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடையை இடம் மாற்றக் கோரி போராட்டம் நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் தலைமையில் மே 2020 அன்று நடந்த கூட்டத்தில், மேற்படி கடையை ஆறு மாதத்திற்குள் இடம் மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஒத்துக் கொண்டார். ஆனால் இதுவரை கடையை இடமாற்றம் செய்யவில்லை.

இதனால் தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே நீதிமன்றம் இந்த கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (நவம்பர் 15) நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வேலுமணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது டாஸ்மார்க் தரப்பு வழக்கறிஞர் கடையை இடமாற்றம் செய்ய கால அவகாசம் கோரினார். அதற்கு நீதிபதிகள் ஒரு கடையை இடமாற்றம் செய்ய எவ்வளவு நாள் கால அவகாசம் எடுப்பீர்கள். ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் கால அவகாசம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு மதுபான கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய இழப்பு வந்துவிடாது எனக் கூறிய நீதிபதிகள், இரண்டு நாள்களுக்குள் கடையை மூடி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சி காவிரி மணல் குவாரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.