ETV Bharat / state

'கை'யை இழந்தாலும் தன்னம்பிக்'கை' இழக்கவில்லை - அசத்தும் மதுரை இளைஞர்! - madurai

மதுரை: தன்னுடைய ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உழைத்து வாழ்க்கை நடத்திவருகிறார் இளைஞர் வேல்முருகன். அவர் வாழ்க்கை குறித்த சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்...

வேல்முருகன்
author img

By

Published : Sep 26, 2019, 3:24 PM IST

மதுரை மாவட்டம் பரவை அருகே வசித்துவருபவர் இளைஞர் வேல்முருகன். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது விபத்தின் காரணமாக தனது ஒரு கையை இழந்தார். அந்த நிறுவனம் எந்தவிதமான இழப்பீடும் தந்து உதவிக்கரம் நீட்டாத நிலையில் குடும்பத்தின் பாரம்பரிய தொழில் அவருக்கு கை கொடுக்கிறது. ஆனாலும் தன்னம்பிக்கை விடாமுயற்சி ஆகியவற்றின் மூலமாக தனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான பானை, மண் கலயங்கள் முதலியவை செய்கின்ற பணியை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.

விபத்தில் ஒரு கையை இழந்தபின் பணிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை வேல்முருகனுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் குடும்பத்தை வறுமை வாட்டத் தொடங்கியது. என்ன செய்வது என்று அறியாமல் இருந்த நிலையில், பெற்றோர் கொடுத்த நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான் தன்னால் இந்தத் தொழிலில் ஈடுபட முடிந்தது என்று கூறிய அவர், குறை என்பது எண்ணத்தை பொறுத்துதான் என்கிறார் வேல்முருகன்.

இது குறித்து வேல்முருகன் கூறுகையில், ”மதுரையில் ஒரு நிறுவனத்தில் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அந்த நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு இயந்திரம் ஒன்றில் எனது கை சிக்கியதில் அதை இழந்துவிட்டேன். ஆனால் எந்தவிதமான இழப்பீடும் நான் பணியாற்றிய நிறுவனம் வழங்கவில்லை. யாரும் எனக்கு வேலை கொடுக்க முன்வராத சூழலில், எனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான மண்பானை செய்வது எனக்கு கை கொடுத்தது.

இருப்பினும் இத்தொழிலுக்கு தற்போது வருமானமும் அவ்வளவாக இல்லை. அதுமட்டுமன்றி இதற்காக மண் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுதான் இந்த மண்பானைகள் செய்வதற்கான சவடு மண்ணை பெற முடியும். கோச்சடை, அலங்காநல்லூர், ஆதனூர் போன்ற பகுதியில் இருந்துதான் இதற்குரிய மண்ணை அள்ளிக் கொண்டு வர முடியும். தற்போது ஒரு வண்டி மண் மூன்றாயிரத்து 500 ரூபாய்க்கு வாங்குகிறேன். எனது மனைவியின் நகைகளை விற்றுதான் இந்த மண்ணை வாங்கி வாழ்க்கை நடத்திவருகிறேன்” என்றார்.

கை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காதவர்

வேல்முருகனின் மனைவி புவனேஸ்வரி கூறுகையில், ”ஒரு கையைக் கொண்டு அவரால் பெரும்பாலான வேலைகளைச் செய்ய இயலாது. ஆகையால் காலையில் பலகைகளை அடுக்குவதிலிருந்து மண் பிசைவதுவரை உதவிவருகிறேன். இந்தத் தொழிலை மழைக்காலத்தில் மேற்கொள்ள முடியாது என்பதால், அதற்கான நிவாரணத் தொகை ரூபாய் ஐந்தாயிரம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அதைக்கூட அரசிடமிருந்து எங்களால் பெற முடியவில்லை.

பலமுறை முயற்சி செய்தும் நிவாரணத் தொகையை வாங்க முடியவில்லை. ஆனால் இந்தத் தொழிலே செய்யாதவர்கள் நிறைய பேர் பணத்தை வாங்குகிறார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு அரசும் மனது வைத்தால் எங்களுக்கான உதவியை நாங்கள் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.

இந்தத் தொழிலில் வருமானம் குறைந்திருப்பதால் மீண்டும் தன்னம்பிக்கையுடன் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் அவர், தனது நிலை குறித்து பரிசீலித்து அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். மனிதன் வாழ்வதற்கு உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் வேல்முருகன்.

விபத்தின் காரணமாக தனது ஒரு கையை இழந்தாலும் கூட நம்பிக்கையிழக்காமல் இன்னொரு கையால் தனது குடும்பத்தை காப்பற்றும் இவருக்கு அரசு கைக்கொடுக்க வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க:கீழடி அகழாய்வில் கைகோர்க்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - துணைவேந்தர் தகவல்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.