ETV Bharat / state

திருமலை நாயக்கர் விழா: தெலுங்கு பேசும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்காதது வருத்தம் - முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்

author img

By

Published : Jan 18, 2022, 5:30 PM IST

மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவில் தெலுங்கு பேசும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காதது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

ராம மோகன ராவ்
ராம மோகன ராவ்

மன்னர் திருமலை நாயக்கரின் 459ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்போது திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு பேசும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்த வருவதில்லை. இந்த செயல் மன வருத்தத்தை தருகிறது.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பேட்டி

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு திருமலை நாயக்கருக்கு இப்படி ஒரு விழா ஏற்பாடு செய்ய அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமுதாய ரீதியாக இல்லாமல் பொதுவான அரசியல் கட்சி தொடங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பதுங்கிய சிறுத்தை சிக்குமா ? சிறுத்தையிடம் பலிக்குமா வனத்துறையினர் திட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.