ETV Bharat / state

'எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூற முடியாது'- கமல் ஹாசன் - kamal haasan news

உங்கள் தலைமையில் மூன்றாவது அணி சாத்தியமா என மதுரையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal haasan news
'எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூற முடியாது'- கமல் ஹாசன்
author img

By

Published : Dec 13, 2020, 3:14 PM IST

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளார். மதுரை, நெல்லை மண்டலங்களில் இன்று முதல் டிசம்பர் 16ஆம் தேதிவரை அவர் முதல்கட்ட பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று மதுரையில் பரப்புரையை தொடங்குவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடைசி நேரத்தில் பரப்புரைக்கு காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர். எங்களுக்குத் தடைகள் ஒன்றும் புதிதல்ல.

'எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூற முடியாது'- கமல் ஹாசன்

அனுமதி மறுப்பதில் ஏற்கனவே அனுபவம் ஒத்திகை பார்த்துள்ளதால் எங்களது பரப்புரை மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டே எங்களது பரப்புரை இருக்கும். யாருக்கு எங்கள் பரப்புரை குத்தலாக இருக்குமோ அவர்கள் எங்களுக்கு தடைபோடுவோர்கள். அதையும் மீறி எங்களுடைய பரப்புரை தொடரும் என்றார்.

உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: ‘பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது’ - பொங்கிய கமல்: காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.