கரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தினக்கூலி செய்வோர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாததால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை பனையூரைச் சேர்ந்த கலைமாமணி விருதுபெற்ற நாட்டுப்புற கலைஞர் ராஜா என்பவர் நலிவுற்ற சக கிராமிய கலைஞர்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
மதுரை பனையூர் பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள் இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்து வருகின்ற பொதுமக்களுக்கும் ஒருவாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கினார்.
ஊரடங்கு உத்தரவால் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு போதிய உதவிகளை செய்ய வேண்டும் என கலைமாமணி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்திற்கு ஆறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு!