ETV Bharat / state

ஆர்எஸ்எஸ் விருப்பத்தின் பேரில் தமிழ்நாடு அரசு.. பாஜக உடன் மு.க.ஸ்டாலின் மறைமுக உறவு.. கி.வெங்கட்ராமன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு.. - தமிழ் தேசிய அரசியல்

தமிழ்நாடு அரசு அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக விருப்பத்தின் பேரில்தான் செயல்படுகிறது. மோடி மாடலுக்கு உட்பட்ட திராவிட மாடலாக இருப்பதில்தான் திமுக அரசுக்கு அதிக அக்கறை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 10, 2023, 4:16 PM IST

Updated : Mar 10, 2023, 5:11 PM IST

ஆர்எஸ்எஸ் விருப்பத்தின் பேரில் தமிழ்நாடு அரசு.. பாஜக உடன் மு.க.ஸ்டாலின் மறைமுக உறவு.. கி.வெங்கட்ராமன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு..

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வட மாநிலத்தவர்கள் வருகை, குமார வயலூர் அர்ச்சகர் நியமன ரத்து உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு இன்று (மார்ச்.10) சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் அதிகமான வருகை தொழில், வணிகம், வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் ஏற்படும் அவர்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தி நிலைப்படுத்துவதற்கும், இதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் 'தமிழ்த் தேசியப் பேரியக்கம்' போன்ற அமைப்புகளை மிரட்ட காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரிலிருந்து அனைவரும் பேசுவது, வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு துணையாக உள்ளது என்பதைக் காட்டுவதற்காக, இந்தியிலேயே அறிக்கை வெளியிடுவது என செய்கிறார்கள். வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டது என்பது ஒரு வதந்தி என்பது முதலிலேயே தெரியும். அதற்கான ஊற்றுக்கண் என்பது பாஜகவைச் சேர்ந்த ஒரு நபர். இது உடனடியாகவே தெரிந்துவிட்டது. ஆனால், அதன்பிறகு இவ்வளவு இயங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

டிஜிபியின் அறிக்கை போதும்: ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகைக்காக வட மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு திரும்புவதும், பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்புவது என்பது இயல்பானது. இதனைத் தேவையற்ற வகையில் திரித்து பேசுவதும் என்பது இதனால், தமிழ்நாட்டில் தொழில்கள் நசிந்துவிடும் என்றும் தகவல்களை பரப்பி பிரிவினைவாதத்தை இரண்டு சமூகங்களிடையே ஏற்படுத்துகிறார்கள் என குற்றச்செயலாக வர்ணிப்பதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவைகளுக்கு தக்க நேரத்தில், தமிழ்நாடு டிஜிபி அரைமணி நேரத்திலேயே அதன் மூலம் எங்கிருந்து வந்தது என்பது உள்ளிட்ட அனைத்தையும் தெரிவித்துவிட்டார். வதந்தி பரப்பிய அந்நபரைக் கைது செய்ய தனிப்படையும் அமைத்து அவர் வெளியிட்ட அறிக்கையே போதுமானது. இதற்கு மேலும், அதில் ஒன்றுமில்லை; எனினும், இதை சூதாக சிலர் பயன்படுத்துகின்றனர்.

திமுக சொன்னது தான்: அண்மையில் அமைச்சர் சேகர் பாபு, ஜெயின் சங்க நிகழ்ச்சியில் பேசியபோது, 'திமுகவை நீங்கள் வெறுக்கிறீர்கள். எந்தக் காலத்திலும் நீங்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்துவதில்லை. ஆனாலும், நாங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளோம். தற்போதும் உங்களின் ஓட்டுக்காக இதனை நான் கூறவில்லை' என்றெல்லாம் பேசினார். இவரைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'ஒவ்வொரு நாளும் வடமாநிலத்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கானோர் வருவது எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் பாஜகவுக்கான வாக்காளர்கள் என்கிறார்கள்' என்று தனது கவலையை வெளிப்படுத்தினார். ஆகையால் இந்த வட மாநில தொழிலாளர்களின் மிகை நுழைவு குறித்து ஆளுந்தரப்பினரே பேசுகின்றனர். ஆனால், இந்த வதந்திக்குப் பிறகு முற்றும் மாற்றிப் பேசுகிறார்கள். இந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திமுக, அதிமுக என்ன செய்தாலும் அவர்கள் பாஜகவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ தான் தங்களது வாக்கை செலுத்துவார்கள்.

பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் மறைமுக உறவு: அப்படியிருந்தும் ஏன் திமுக ஆதரிக்கிறது என்றால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் அடிமையாக இருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், மு.க.ஸ்டாலின் மறைமுக உறவு கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். மோடி மாடல்தான் திராவிட மாடல். அதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்திக்காரர்கள் இல்லையென்றால் தொழில் நடத்த முடியாது என்கிறார்கள். இந்திக்காரர்களைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலைமைக்குள் இவர்கள் தள்ளப்பட்டால், சிக்கல் உருவாகும்.

பொதுவாக வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கென்று சங்கம் அமைத்து கொள்ளமாட்டார்கள். அதேபோன்று பொதுவுடமை கட்சிகளின் சங்கங்களிலும் அவர்கள் சேர மாட்டார்கள். பொதுவுடைமை இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு கருங்காலிகளாகத்தான், இந்தி தொழிலாளர்கள் பயன்படுகிறார்கள்.

என்எல்சி போராட்டம்: என்ஃபீல்டு இந்தியா நிறுவனத்தில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியது. அப்போது இந்தி தொழிலாளர்களை பேருந்தில் அழைத்து வந்து அப்போராட்டத்தை முடக்கினார்கள். அதேபோன்று இந்திய அரசின் நிறுவனமான என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை மிகப் பாடுபட்டு ஒருங்கிணைத்து ஏஐடியூசி சங்கம் ஒன்றை அமைத்தது. அவர்களை நிரந்தப்படுத்தக் கோரி போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கினார்கள்.

அத்தீர்ப்பை இந்திய அரசு நிறுவனமான என்எல்சியே மீறியது. அதற்காகப் போராட்டம் நடத்தியபோது, என்எல்சியின் தலைவர், போராடுவோரை நீக்கிவிட்டு, இந்தி பேசும் மாநிலத்திலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவோம் என வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், இன்றைக்கு இந்தி தொழிலாளர்களை எதிர்த்துப் பேசுவது என்பது நாட்டு ஒற்றுமைக்கு ஆபத்து என்று அனைவரும் பேசுகிறார்கள். பேசக்கூடிய இவர்கள் எல்லோருக்குமே பிற மாநிலங்களில் கட்சிகள் உள்ளன.

மேற்கு வங்கம் முன்னுதாரணம்: மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு முதலமைச்சராக இருக்கும்போது வங்காளிகளைத் தவிர வேறு யாருக்கும் முன்னுரிமை தர முடியாது என்று அறிவித்தார். திருச்சி திருவெறும்பூரிலிருந்து வெறும் 2 ஆண்டுகளுக்கான பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தொழிலாளர்கள் மேற்கு வங்கம் அழைத்துச் செல்லப்பட்டபோது, அப்போது அங்கு சேர்க்கக்கூடாது என்று மேற்கு வங்க சிஐடியூவினர் போராட்டம் நடத்தினர். முதலமைச்சர் ஜோதிபாசுவிடம் புகார் தெரிவித்தபோது, எங்கள் தொழிலாளர்களுக்குதான் முன்னுரிமை. எங்கள் சட்டம் அதைத்தான் சொல்கிறது என்று மறுத்துவிட்டார்.

ஆக, எல்லோரும் அவரவர் வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, நமது வீட்டில் மட்டும் கதவே இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள். 'மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் 85 விழுக்காடு குஜராத் மாநிலத்தவருக்கே வேலைவாய்ப்பு என்று சட்டம் உள்ளது. இது அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனை மீறி இந்திய ஆயில் கழகம் பொறியாளரையும் இந்திக்காரர்களையும் பணிக்கு எடுத்தபோது, இதனால் பாதிக்கப்பட்ட குஜராத் மாணவர் தொடுத்த வழக்கில் மாநில அரசே தன்னை வாதியாக இணைத்துக் கொண்டு தீர்ப்பைப் பெற்றனர். அதேபோன்று அண்டையில் உள்ள கர்நாடக மாநிலத்தில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது. அங்கும் மண்ணின் மைந்தர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளது.

ஒவ்வொரு வேலையைப் பொறுத்தவரை 80 முதல் 70 விழுக்காடு என நிர்ணயம் செய்துள்ளார்கள். கீழ்நிலைப் பணிகளில் 100 விழுக்காடு. ஐஏஎஸ் அலுவலர் நிலைக்குப் போகும்போது 80 விழுக்காடு என்று வரையறை செய்துள்ளனர். இதற்காக அதிகாரமுள்ள தனி ஆணையத்தையே கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. இது மராட்டியத்தில் முன்னரே உள்ளது. அண்மையில் தெலங்கானா மற்றும் அரியானாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தால், மண்ணின் மக்களுக்கு 30 விழுக்காடு வரிகளில் தள்ளுபடி தருகிறது அந்த அரசு. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இதனைக் கேள்வி கேட்டால் இனவாதம் என்கிறார்கள்'. வதந்தியைப் பரப்பிய பாஜக காரர்களைக் கண்டிக்க மறுக்கிறார்கள்.

மிகை நுழைவே சிக்கல்: கோவை சூலூரிலுள்ள ஒரு கல்லூரியின் விடுதியில் மாணவர்களுக்கும், அங்கு பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இவ்விசயத்தில் கல்லூரி நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பொதுவாக கல்லூரி விடுதிகளில் இதுபோன்று நடைபெறுவது இயல்பான ஒன்று. அதன் பிறகு அந்தத் தொழிலாளி கல்லூரிக்கு வெளியே வந்து வேறு வேறு தொழில்களில் உள்ள தனது மாநிலத்தவரை ஒன்றிணைத்து உருட்டுக்கட்டையோடு கல்லூரி விடுதிக்குள் புகுந்து அடிக்கிறார்கள். இது வீடியோவாக வருகிறது. இப்படி அடிக்கிறார்கள் என்று நாங்கள் சொல்வது எப்படி வதந்தியைப் பரப்புவதாக அமையும்..? இது ஒரு அநீதியானது.

ஸ்டாலின் பேசினால் பரப்புரை, நாங்கள் பேசினால் இனவெறியா?: 2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் திமுக, தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் 75 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றுவோம் என்றார்கள். தேர்தல் பரப்புரையில் ஸ்டாலினும் வடமாநில தொழிலாளர்களின் வருகை குறித்து பேசியுள்ளார். இதை நாங்கள் பேசினால், இனவெறி என்றால், ஸ்டாலின் பேசுவது என்ன பாசம்..?

தமிழர்களை தாக்குவது குற்றமில்லையா?: நாங்கள் 90 விழுக்காடு என்கிறோம். நீங்கள் 75 விழுக்காடு என்கிறீர்கள். அதையாவது செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம். அதனை செய்துவிட்டால் இந்தப் பிரச்சனையே இல்லையே. மிகை நுழைவு எனும்போதுதான் சிக்கல் வருகிறது. இந்த ஊரில் இந்திக்காரன் அடிவாங்குவதைவிட, இந்திக்காரன் நம் தமிழர்களை அடிப்பது என்பது இரண்டும் சமமான குற்றமல்ல. அந்த சம்பவங்களுக்குரிய குற்ற நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளலாம். அதில் தவறில்லை. அவர்கள் நம்மை அடிப்பது என்பது இந்த இனத்தை அவமானப்படுத்துவதாகும். ஒருவரை ஒருவர் தாக்கினார்கள். அதற்குரிய பஞ்சாயத்து முடிந்துவிட்டது.

தமிழர்களை முதலமைச்சர் சந்திக்கவில்லை?!: ஆனால் அவன் தன்னுடைய ஆளைத் திரட்டிக்கொண்டு மீண்டும் வந்து தாக்குகிறானென்றால் அதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்வது..? இதேபோன்ற விசயம் அஸ்ஸாமில் பீகாரிகளுக்கு எதிராக நடைபெற்றது. லாலு பிரசாத் முதலமைச்சராக இருக்கும்போது உடனடியாக அந்தத் தொழிலாளர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், பீகாரில் உள்ள அஸ்ஸாமியர்களை வெளியேற்றுவோம் என்று பேசினார். அப்படிதானே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும்.

இந்தி பேசுபவர்களின் மாநிலமா இது?: தற்போது இந்திய அரசு 'உத்தர் பாரத் பவன்' என்ற பெயரில் கொண்டு வந்துள்ள திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் எந்த உதவியும் தேவையில்லை. நேரடியாக இந்திய அரசு அவர்களுக்கு வழங்கப்போகிறது. ஆகையால் இதுபோன்ற செயல்களெல்லாம் மிகப் பெரிய ஆபத்து. தமிழர்களின் தாயகமாக தமிழ்நாடு இருக்குமா..? இந்திக்காரர்களின் மாநிலமாக இருக்குமா..? என்ற ஒரு கேள்வி நமக்கு முன்னால் உள்ளது.

எதற்கும் ஒரு வரம்பு உண்டு: எனவே இதற்கு ஒரு வரம்பு கட்டுவது அவசியம். மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் உள்ளது போன்று உள் நுழைவு அனுமதி சீட்டு முறை தமிழ்நாட்டிற்கும் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதியைப் பெற்ற பிறகுதான் வெளிமாநிலத்தவர் யாராக இருந்தாலும் இங்கு வர வேண்டும். இது ஒரு உள்நாட்டு விசா போன்றது. இம்முறை கொண்டு வரப்பட்டால் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது.

மேலும் பேசிய அவர், குமார வயலூர் முருகன் கோயில் அர்ச்சகர் நியமனம் தடை குறித்த தீர்ப்பு குறித்த விவகாரத்தில் ஆகமக் கோயில்கள் எவை? என பின்வருமாறு விளக்கினார். 'குமார வயலூர் முருகன் கோயில் அர்ச்சகர் நியமனம் தடை குறித்த தீர்ப்பு, ஒரே வழக்கின் மற்றொரு பகுதியாகும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, 2020ஆம் ஆண்டு அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என நேரடியாக குறிப்பிடாமல் கொண்டு வரப்பட்டு, பரம்பரையாக வருபவர்களைத் தவிர தகுதியின் அடிப்படையில் ஜாதி பார்க்காமல் சேர்த்துக் கொள்ளலாம் எனப் பொருள்படும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக பின்னர் வந்த திமுகவின் ஆட்சியில், அத்திருத்தத்தின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள். அவர்களில், 'குமார வயலூர் முருகன் கோயிலில் நியமனம்' செய்யப்பட்ட இருவரும் அடக்கம்.

இதை எதிர்த்துதான் மதுரை சிவாச்சாரியார்கள் சங்கமும், ஆர்எஸ்எஸை சேர்ந்த ரமேஷ் என்பவரும் வழக்கு தொடுத்தனர். மேலும் ஆர்எஸ்எஸ் சார்புடைய பலரும் இதற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. இதற்கு முன்னால் அர்ச்சகர் நியமனத்தில் பிராமணர்களைத் தவிர பிறர் வரலாமா? என்பது குறித்த முக்கியமான இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாக வந்துள்ளன.

இது குறித்த சேஷம்மாள் வழக்கில், எதிர் தமிழ்நாடு அரசு வழக்கில் ஆகமம் என்பதைக் காரணமாக சொல்லியிருந்தனர். ஆகமப்படி ஆகமக் கோயில்களில் அந்த ஆகமத்திற்குரிய பிரிவினர்தான் அர்ச்சகராக நியமிக்கப்படலாம். தற்போது காமிகா ஆகமத்தின்படி, அதில் உள்ளவர்கள்தான் வரலாம் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

அந்த ஆகமத்திற்குரிய எழுத்து வடிவத்தை அது சமஸ்கிருதத்தில் இருந்தாலும்கூட அதனை ஆவணமாக வழக்கைத் தொடுத்தவர்கள் சமர்ப்பித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. அப்படியயொரு ஆவணமே இல்லாமல் இந்த வழக்கு நடைபெற்றுள்ளது. அதையும் சகித்துக் கொண்டு அந்த வழக்கை நடத்தினார்கள். அக்குறிப்பிட்ட சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றத்திலுள்ள ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆலயம் ஆகமத்தில் மொழியோ, சாதியோ, பாலினமோ சொல்லப்படவில்லை என தீர்ப்பில் எழுதியுள்ளது.

அதை விளக்கி, 2016-ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, விரிவாக ஆலோசனை செய்து அதில் ஆகமத்தின் அடிப்படையில் எந்தவித தடையும் கிடையாது. ஒருவேளை ஆகமம் தடையாக இருக்குமானால் அரசியலமைப்புச் சட்டம்தான் மேலோங்குமே தவிர, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுதான் நிற்குமே தவிர ஆகமம் நிற்காது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆகமக் கலப்புகள்: உச்சநீதிமன்றத்திற்கு உட்பட்ட அமைப்புதான் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும். ஆகையால், அதன் தீர்ப்புக்கு உட்பட்டுதான் இவர்கள் தீர்ப்பு வழங்க முடியுமே தவிர மாறாக இருக்க முடியாது. அதிகாரமுமில்லை. ஆனால் அம்மையார் பண்டாரி தலைமையிலான அந்த அமர்வில் அக்குறிப்பிட்ட வழக்கில் ஆகமங்கள் குறித்து மிக விரிவாகப் பேசுகிறார். அதற்கு என்ன காரணம் என்றால், தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து வாதிடவில்லை. மாறாக, அந்த ஆகம முறைகளை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வாதாடியது.

வைணவக் கோயில்களில் வைணவர்களும், சைவக் கோயில்களில் சைவர்களும்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதில் ஆகமத்தின் அடிப்படையில் வழக்கு நடைபெற்றபோது, இதனை எதிர்த்து வாதிடக்கூடிய தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்று சொல்ல வேண்டிய நேரத்தில் ஆகம முறையை ஏற்றுக்கொண்டு வழக்கில் வாதிட்டது. ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை அனுமதிக்க மாட்டோம்.

அதை ஆகமத்தில் பின்பற்றுகிறோம் என்று எதிர் தரப்பு கூறியவுடன், எந்த ஆகமத்திற்கு எந்த கோயில்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று தமிழ்நாடு அரசைப் பார்த்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உடனே தமிழ்நாடு அரசு பின்வாங்கி, அதனை அறிவதற்கு நாங்கள் ஒரு குழு ஒன்றை அமைப்பதற்குத் தயார். ஒருவேளை, இந்த நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்தாலும் அதற்கு ஒத்துழைக்கவும் தயார் என்று பதில் அளித்தார்கள். இதனை தமிழ்நாடு அரசும், எதிர் வழக்குதாரர்களான ஆர்எஸ்எஸ் தரப்பும் இணைந்து வாங்கிய தீர்ப்பு அது. குமார வயலூர் கோயில் வழக்கில் அப்பட்டமான சட்ட மீறல் நடைபெற்றுள்ளது.

சேஷம்மாள் தீர்ப்பு வந்த உடனேயே தமிழ்நாடு அரசு நீதிபதி மகாராஜன் தலைமையில் குழுவொன்றை அமைத்தது. அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களை ஆகமக் கோயில்கள் எது ஆகமம் அல்லாத கோயில்கள் எது என மிக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், ஆகமக் கோயில்கள் என்று சொல்லப்படுபவை எவற்றிலும் அப்படியொரு கட்டுப்பாடு இல்லை. ஆகமக் கலப்புகள் அல்லது ஆகம மீறல்கள் அனைத்துக் கோயில்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகமத்தின்படி ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு பூஜை நடைபெறக்கூடாது. ஆனால் கிரிகோரியன் காலண்டர் முறை. ஆனால், எல்லா கோயில்களிலும் நள்ளிரவு பூஜை நடைபெறுகிறது.

ஒருவர் புதிதாக வாங்கிய வாகனத்தின் சாவியை கோயில் கருவறையில் சாமி சிலை முன்பாக வைத்து வழிபாடு நடத்தித் தருவது ஆகமத்திற்கு விரோதமானது..? ஒரு கோயிலுக்குள் ஆகமப்படி இருக்க வேண்டுமானால், அந்தக் கோயிலுக்குள்தான் சமைத்து உண்ண வேண்டும். நெய்வேத்தியம் உள்ளிட்ட படையல்களும் அங்குதான் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் கோவிலில் பணியாற்றும் பூசாரிகள் தங்களது வீட்டிலிருந்து சமைத்து எடுத்துச் செல்கிறார்கள். தில்லை நடராஜர் உள்ளிட்ட மிகப் பழமை வாய்ந்த கோயில்கள் அனைத்தும் எந்த ஆகமத்தின்படி கட்டப்பட்டதோ அந்த ஆகம முறைப்படி இன்று இயங்கவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. மன்னர்கள் காலத்திலேயே வழக்கொழிந்து போன ஒரு முறை இன்று வரை தொடர்கிறது' என்று தெரிவித்தார்.

திராவிட மாடலும் மோடி மாடல்தான்: 1980ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாமா? என்றும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு பாடமும் பயிற்சியும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக இந்தக் குழு அமைந்தது. அதில் மடாதிபதிகள், பிராமாணர்கள் உள்ளிட்ட நிறைய பேர் இருந்தனர். அனைத்தையும் விசாரித்துவிட்டு அவர்களும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அதற்குரிய பாடமுறைகள் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.

இந்த இரண்டு குழுவின் அறிக்கைகளே போதுமானதாக இருக்க, மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துக் கொண்டது? இதனைத் தெரிந்தே செய்கிறார்கள். கல்வித்துறையிலிருந்து ஆன்மிகத்துறை வரை மோடி மாடலையே திராவிட மாடலும் செய்கிறது. குறைந்தபட்சம் நீதிபதியாவது முன்னர் உள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தவிர்த்திருக்க வேண்டும். இனிமேல் புதிதாக அமைக்கப்படும் குழு தமிழ்நாட்டிலுள்ள 4 ஆயிரம் கோயில்களை ஆய்வு செய்து முடிக்க வேண்டுமானால் ஆயுள் போதாது. ஒவ்வொரு கோயிலிலும் ஒருவர் வழக்குப் போட்டாரென்றால் என்றைக்கு இந்த ஆய்வு முடியும்..? சூழ்ச்சி வலைக்குள்ளே தமிழ்நாடு அரசு தெரிந்தே சிக்கிக் கொண்டிருக்கிறது.

நீதிபதிகளுக்கும் கருத்தில் சார்பு உண்டு: ஒவ்வொரு நீதிபதிகளும் ஏதோ ஒரு கருத்தியலால்தான் ஆளப்படுகிறார்கள். அதுபோல நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்து மதக் கருத்தியல் சார்ந்தவர் என்பதால் அது சார்ந்து அவரது கருத்து தீர்ப்பாக வெளிப்பட்டிருக்கலாம். இவரது உத்தரவுக்கு முன்னால் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் ஆகமக் கோயில்களை வகைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைத்துள்ளது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. இந்நிலையில், இது காமிக ஆகமக் கோயில் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது எவ்வாறு முறையாகும்

ஆகையால் நீதிமன்றத்தின் மூலமாக தொடர்ந்து முறை மீறல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் மோசமான உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கும் மேலான தீர்ப்பு இது. சட்ட மீறலை நீதிமன்றமே செய்கிறது என்பது கண்டனத்திற்குரியது. இந்த தீர்ப்பிற்கு மேல் முறையீட்டை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடையைப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு ஆர்எஸ்எஸ்-சைக் கண்டு ஆடக்கூடாது. அவர்களது விருப்பத்தின்பேரில்தான் நடந்து கொள்கிறார்கள். அக்கிரஹாரத்தின் எரிச்சல் பார்வை வந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். இதிலிருந்து திமுக அரசு வெளியே வர வேண்டும்' என்றார்.

தமிழ்நாட்டில் முதலாளிகளாகவும், மொத்த வணிகர்களாகவும் மார்வாடிகளும், குஜராத்தி சேட்டுகளும்தான் உள்ளதாக திருமாவளவன் கூறியதாக எழுப்பிய கேள்விக்கு பதிலத்து பேசிய அவர், 'தமிழ்நாட்டில் பெருந்தொழில் முதலாளிகளாகவும், உள்ளூரிலுள்ள மொத்த வணிகர்களாகவும் மார்வாடிகளும், குஜராத்தி சேட்டுகளும்தான் உள்ளனர். இதனை எதிர்த்து கடந்த 1991-ம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் மார்வாடி மட்டும்தான் சுரண்டுகிறார்களா, தமிழ் முதலாளிகள் சுரண்டவில்லையா என்று பேசினார். இப்போது அதானி, அம்பானியையாவது எதிர்க்கலாம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார். தமிழர் தாயகத்திற்கு இரண்டு வகையில் பிரச்சனைகள் வருகின்றன. கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வணிகம் செய்வதற்காக வெள்ளைக்காரன் வந்தான். அதன் பிறகு நாடே அவனுடையதாக மாறியது.

தொழிலையும் வணிகத்தையும் ஒரு இனம் அல்லது நாடு கைப்பற்றுமானால், எந்த நாடு இழந்ததோ அது அடிமை நாடாக மாறும். இத உலக வரலாறு. இஸ்ரேலியர்கள் கையில் பாலஸ்தீனம் போனது அவ்வாறுதான். இதுபோலவே மார்வாடிகள், குஜராத்திகள் வணிகம் செய்வதற்கு சட்டப்படிதான் வருகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிலங்கள் அவர்களது கைகளுக்கு மாறிவிடுகிறது. குறிப்பாக, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு அவர்கள் அனைவரும் இடம், வீடு வாங்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ரியல் எஸ்டேட் வணிகத்தில் பெரு முதலாளிகளாக அவர்களே உள்ளனர். இடம் கைமாறிச் சென்றது என்றால் தாயகத்தின் ஒரு பகுதி சென்றுவிட்டது என்றுதான் பொருள். முதலீட்டை வைத்து நிலங்களைக் கைப்பற்றுவது என்பது ஒரு வடிவம். இந்த நிலத்துக்குள் வேற்று இன மக்கள் மிகை எண்ணிக்கையில் வரும்போது வாக்காளர்களாக இருப்பார்கள். தொழில் அல்லது வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அதன் வழியில் இங்கு அவர்களது பண்பாடும், கலாச்சாரமும், மொழியும் இயல்பானதாக மாறும். ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த தாயகம் அயலார் கைளுக்கு மாறும் அபாயமுண்டு. அதானி, அம்பானி வந்தால் அது ஒரு வகை. இந்தி தொழிலாளி நுழைவு என்பது மற்றொரு வகை.

அமெரிக்காவில் உடனடியாக நீங்கள் வேலைக்கு சேர்ந்துவிட முடியாது. குறிப்பிட்ட கல்வித்திறனில், தகுதியில் ஒருவர் வேலைக்கு வேண்டுமென்றால், முதலில் அந்தத் தகுதிக்குரிய உள்ளூர் நபரைத் தேட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில்தான் வேறு மாகாணத்தைச் சேர்ந்த வெளியாட்களை நீங்கள் தேர்வு செய்ய முடியும் என்று ஒரு முறை வைத்திருக்கிறார்கள். அவ்வாறுதான் தேர்வு செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க அங்குள்ள அரசு நிறுவனம் பல்வேறு வகையான கண்காணிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறார்கள். அந்த விதியை மீறினால் அக்குறிப்பிட்ட நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படும். அதேபோன்றுதான் இங்கே பல்வேறு மாநிலங்கள் சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. ஆக, பிற மாநிலங்களில் இருந்தால் அது பாரத மாதா, தமிழ்நாட்டில் பேசினால் பிரிவினைவாதமா..?

திருமாவளவன் பேசியது வருத்தம்: இது தொழிலாளிகளுக்கு பாட்டாளிகளுக்கு விரோதமானதா..? இதே திருமாவளவனிடம் நான் கேட்பது என்னவென்றால், மத்திய அரசுப் பணிகளில் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இருக்கின்ற காரணத்தால், எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் இந்த மண்ணைச் சேர்ந்த எஸ்சி/எஸ்டி தேர்வர்கள் வருவதில்லை. அந்த இடத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த எஸ்சி/எஸ்டி-க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு, சமூக நீதி என்ற அடிப்படையில் பார்த்தீர்களேயானால், இது சரியானதுதான். ஆனால், எந்த மண்ணின் மக்கள் என்பதுதான் இங்கு கேள்வி. இதற்கெல்லாம் திருமாவளவனின் பதில் என்ன..? பாரத மாத பஜனை, திமுக ஆதரவு என்பதற்காக தமிழினத்தைப் பலியிடுவதற்கு திருமாவளவன் இன்னொரு கோணத்தில் பேசுகிறார் என்பது வருத்தத்திற்குரிய விசயம்' எனத் தெரிவித்தார்.

சீமான் கருத்தில் உடன்பாடில்லை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது, சீமான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறித்து பேசியவை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், 'வரலாற்று வழிப்பட்டு பார்த்தாலும் அருந்ததியர்களை அயலார் என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை 1951 மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு முன் இங்கு வந்த மக்கள் மார்வாடிகளாக இருந்தாலும் சரிதான். அவர்களை மண்ணின் மக்களுக்குரிய சமஉரிமை உள்ளவர்கள்தான். அருந்ததியர், சௌராஷ்ட்டிரர், உருது பேசும் இஸ்லாமியர்கள் இவர்கள் எல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அயலராகப் பார்ப்பதை நாங்கள் அடிப்படையில் ஏற்கவில்லை.

வரலாற்று வழியிலும், சமூக அறிவியலின் படியும், ஜனநாயகப் பண்பின் அடிப்படையிலும் சீமான் பேச்சை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை வைத்துக் கொண்டு திமுகவுக்கு வேண்டிய நபர்களை வைத்து அரசியல் சச்சரவுகளை, மோதல்களை ஏற்படுத்துவது வேறு வகையான விளைவு. குறிப்பாக அந்தப் பேச்சை சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்று பாதுகாப்பு"- டிஜிபி சைலேந்திர பாபு!

Last Updated : Mar 10, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.