ETV Bharat / state

அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஆவணங்கள் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு - rajendra balaji

மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

kt rajenthra bhalaji
author img

By

Published : Aug 15, 2019, 8:20 AM IST

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதவியை தவறாக பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1996ல் இருந்து தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

high court of madras
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை

இந்நிலையில், இந்த வழக்கு சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழ்நாடு பொதுத்துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில், நடவடிக்கை கைவிடப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடரந்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Intro:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல். Body:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவு.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்," விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.