ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை புகார்: வழக்குப்பதிவு செய்யாதது குறித்து நீதிபதிகள் கேள்வி

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி சகோதரி தொடர்ந்த வழக்கில், பாலியல் குற்றச்சாட்டு குறித்து புகார் கொடுத்து 20 நாட்களுக்கும் மேலாக வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பாலியல் வன்கொடுமையால் இளம்பெண் பாதிப்பு
பாலியல் வன்கொடுமையால் இளம்பெண் பாதிப்பு
author img

By

Published : Nov 9, 2022, 9:30 AM IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாமணி என்ற பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எனது தங்கை ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு, மீண்டும் நத்தம் தாலுகாவில் உள்ள எங்கள் வீட்டிற்கு திரும்புவார். அதேபோல் கடந்த மாதம் 4 ஆம் தேதி தேவாலயத்திற்கு செல்வதற்காக சத்திரப்பட்டி பேருந்து நிலையத்திற்கு செல்ல புறப்பட்டார். அப்பொழுது சில இளைஞர்கள் காரில் வந்து எனது தங்கையை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி சத்திரப்பட்டி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக சத்திரப்பட்டி காவல் துறையினர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறினர். நத்தம் காவல் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் படி கூறினர். தொடர்ச்சியாக எனது தங்கையை அலைய வைத்து இறுதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனது தங்கையை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். எனது தங்கையை சந்திப்பதற்காக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் குடும்ப உறவினர்களையும் பார்க்க விடாமல் தவிர்த்து வருகின்றனர். விசாரணைக்காக அழைத்துச் சென்ற எனது தங்கையை பார்க்க விடாமல் செய்வது சட்ட விரோதமானது. எனவே எனது தங்கையினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் அவரை அவரது விருப்பத்தின் பேரில் அவரது சகோதரியுடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு குறித்து புகார் கொடுத்தால் அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யாமல் 20 நாட்களுக்கும் மேலாக அலைகளைக்கப்பட்டுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்தனர். 20 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: சவால்களை சிறப்பாக எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை - டிஜிபி பாராட்டு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.