ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நகைக் கடையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு! - madurai news

Madurai Jewelry shop fire: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள நகைக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

one-person-dead-in-fire-at-jewellery-shop-near-madurai-meenakshi-temple
நகை கடையி தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 7:57 AM IST

நகை கடையி தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை நகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் முக்கிய வீதியாக தெற்கு மாசி வீதி உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு (நவ.27) கடையின் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடையின் உள்ளே இருந்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மதுரை திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம், ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விரைந்து வந்த 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக புகை அதிகளவிற்கு வெளியேறியது. இதனையடுத்து, 3 மணி நேரம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஒருவர் உயிரிழப்பு: இந்த தீ விபத்தின்போது கடையின் 3வது தளத்தில் உள்ள கழிவறையில் மோதிலால் (47) என்ற ஊழியர் சிக்கிக் கொண்டு உள்ளார். இதையறிந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கரும்புகை அதிக அளவு சூழ்ந்ததால் கொண்டு இருந்ததால் அவரை மீட்கும் பணி சவலாக மாறியுள்ளது.

பின்னர் 3 மணி நேரம் கடும் முயற்சிக்குப் பின்னர், மோதிலால் மீட்கப்படும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இதையடுத்து, உடற்கூராய்விற்காக அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக தெற்கு மாசி வீதி பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் அருகே நகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்தும், தீ விபத்து குறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பசியின்றி பணியாற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு.. தமிழகத்தில் முதன் முறையாக கூடலூர் நகராட்சியின் முன்னோடி திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.