ETV Bharat / state

மதுரை மல்லி ரூ.3 ஆயிரம்: விலை குறைய வாய்ப்பு!

மதுரை: கனமழை காரணமாக மல்லிகையின் விலை ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ மல்லிக்கை 3 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

மதுரை மல்லி ரூ.3 ஆயிரம்
மதுரை மல்லி ரூ.3 ஆயிரம்
author img

By

Published : Jan 17, 2021, 11:58 AM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகேவுள்ள மலர் சந்தைக்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தென் மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக மதுரை மல்லிகை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 50 டன் மலர்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக மதுரை, தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால் மல்லிகை வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக கிலோ 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் பிற பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மதுரையில் மழைப்பொழிவு குறைந்ததையடுத்து பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மதுரை மல்லிகையின் இன்றைய விலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய், முல்லை ஆயிரத்து 500 ரூபாய், சம்பங்கி 150 ரூபாய், செவ்வந்தி 150 ரூபாய், அரளி 200 ரூபாய், பட்டன் ரோஸ் 150 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த நாள்களில் மல்லிகையின் வரத்து அதிகரிக்கத் தொடங்கும். பூக்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடர் மழை எதிரொலி: மதுரை மல்லிகை விலை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.