ETV Bharat / state

உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. மாட பிடி.. பரிச வாங்கு! - Jallikattu competition started in Avaniyapuram at madurai

உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி சார்பில் பைக் வழங்கப்படுகிறது.

உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது, Jallikattu competition started in Avaniyapuram
Jallikattu competition started in Avaniyapuram
author img

By

Published : Jan 14, 2022, 8:02 AM IST

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

ஆன் லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், போட்டியில் பங்கேற்றுள்ளனர். 700 காளைகளும் பங்கேற்றுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா தொற்று சான்றிதழ் கட்டாயம், போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிச்சீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

காளை வெளியேறக்கூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்குப் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.

அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் காவல்துறையினர் தடுப்பு அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவசரக்கால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புத்துறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாகப் போட்டி நடைபெறும், போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது.

சிறந்த காளைக்கு கார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி சார்பில் பைக் வழங்கப்படவுள்ளது. தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க : 'இவன் என் மகன்! கண்ணும் கருத்துமாக வளர்க்கிறேன்'- ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர் கண்ணகி பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.