இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் கூறுகையில், "2019 ஜூன் 12ஆம் தேதி முதல் சென்னையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் தொடர் உண்ணாநிலை அறப் போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும் அரசின் கண்டுகொள்ளாத போக்கு தொடருமேயானால் 2019 ஜூன் 16ஆம் தேதியன்று மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட வீரியமான போராட்டத்தினை உறுதியுடன் நடத்திட முடிவெடுக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.