தேனியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், ' தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மற்றும் கிளப்புகள் அதிகமாக உள்ளன. இங்கு டாஸ்மாக் கடைகளில் விற்கும் மது பானங்களுக்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. மேலும் உற்பத்தி விலையை விட அதிகமான விலைக்கு விற்கின்றனர்.
டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானப் பாட்டில்களை மன மகிழ் மன்றங்களுக்கு மொத்தமாக விற்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடை நோக்கி வருபவர்கள் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதுபோன்ற விதிமீறல்கள் அதிகமாக தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைபெறுகிறது. இது குறித்து அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத் தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புச் சட்டம் 2014 கொண்டு வரப்பட்டது. அதை உரிய முறையில் அமல்படுத்துவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி , கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: "வெங்காயத்தோடு போட்டியிடும் மல்லிகைப்பூ"