ETV Bharat / state

ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு! - child sujith news

மதுரை: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற, புதிய கருவி ஒன்றை (அம்பர்லா ரெஸ்கியூ பேபி) அப்துல் ரசாக் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

Inventory for rescue of children who fall into the borewell
author img

By

Published : Nov 6, 2019, 7:16 PM IST

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நான்கு நாட்கள் தொடர்ந்து போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. ஆழ்துளையில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து நடந்து வந்ததால், குழந்தைகளைக் காப்பாற்றும் கருவியை உருவாக்க பலர் முயற்சி செய்துவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மதுரையைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றும் ’அம்பர்லா ரெஸ்கியூ பேபி’(Umberla Rescue Baby) என்ற புதிய கருவியை கடந்த 2018ஆம் ஆண்டே கண்டுபிடித்துள்ளார். கருவி மூலம் ஆழ்துளைக் கிணறில் விழுந்த குழந்தையை சில நிமிடங்களிலேயே காப்பாற்ற முடியும் என்கிறார் அவர்.

இதுகுறித்து பேசிய அவர், ”நான் இந்தக் கருவியை 2018ஆம் ஆண்டே கண்டுபிடித்துவிட்டேன். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை காப்பாற்றும்போது அவன் கையில் போடப்பட்ட சுருக்கு கயிற்றின் முடிச்சு இருக்கமாக இல்லாமல் அடிக்கடி அவிழ்ந்துகொண்டே இருந்தது என்று கூறினார்கள். இதற்கு தனி கவனம் செலுத்தி நான் கருவியை கண்டுபிடித்திருந்தேன். இந்த கருவியைக் கொண்டு சுஜித்தை கண்டிப்பாக காப்பாற்றியிருக்கலாம்.

ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவியின் செயல்முறை விளக்கம்

என்னை அங்கு அனுமதிப்பார்களோ மாட்டார்களோ என்ற ஐயத்தில் நான் அங்கு செல்லவில்லை. இருப்பினும் நான்காம் நாள் அங்கு சென்று நான் கருவியை காண்பித்தேன். முன்னதாகவே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம், ஆனால் இப்போது மண் முற்றிலும் மூடிவிட்டது காப்பாற்ற முடியாது என்று கூறினர்” என்று தெரிவித்தார்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியரிடம் கருவி குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவர் இதற்கு முன் ரைஸ் குக்கர் கண்டுபிடித்ததற்காக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கைகளில் இருந்து தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணறு மூட வேண்டுமா! - FACEAT&P செயலியைத் தொடர்பு கொள்ளுங்க

Intro:*ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற அம்பர்லா ரெஸ்கியூ பேபி என்ற புதிய கருவி கண்டுபிடிப்பு குறித்து மதுரை மாவட்ட அலுவலகத்தில் செயல் விளக்கம்*Body:*ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற அம்பர்லா ரெஸ்கியூ பேபி என்ற புதிய கருவி கண்டுபிடிப்பு குறித்து மதுரை மாவட்ட அலுவலகத்தில் செயல் விளக்கம்*

மதுரையை சேர்ந்த அப்துல் ரசாக்
ஆழ் துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றும் அம்பர்லா ரெஸ்கியூ பேபி என்ற புதிய கருவியை கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார் .

அதன் மூலம் ஆழ் துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சில நிமிடங்களில் காப்பாற்ற முடியும் என்கிறார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடு காட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றும் போது அவன் கையில் போடப்பட்ட சுருக்கு கயிறு முடிச்சு இருக்கமாக இல்லாமல் அடிக்கடி அவிழ்ந்ததாகவும் அதனால் அதில் தனி கவனம் செலுத்தி இந்தக் கருவியை கண்டு பிடித்தேன்.

மணப்பாறைக்கு தான் சென்றபோது மண் மூடியதால் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த கருவி குறித்து தமிழக அமைச்சர் உள்ளிட் அதிகாரிகளிடத்தில் தெரிவித்ததன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தெற்கு வட்டாட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடத்தில் இந்த கருவி குறித்த செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

இவர் இதற்கு முன் ரைஸ் குக்கர் கண்டுபிடித்ததற்க்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

பேட்டி: அப்துல் ரசாக் .
கண்டுபிடிப்பாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.