மதுரை மத்திய சிறையில் 500-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில்கொண்டு சிறைத் துறை நிர்வாகம் சார்பில் சிறுதொழில், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பலவகை தொழில்களை செய்வதற்கு சிறைக்குள்ளேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, சிறையில் தண்டனை பெற்றுள்ள கைதிகளைக் கொண்டு சிமெண்ட் தொட்டிகள் செய்யும் பணி தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மதுரை மத்திய சிறைத் துறை துணைத் தலைவர் பழனி இன்று தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பூந்தொட்டிகளைப் பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கிச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சம்பளமின்றி திகார் சிறையில் தூக்கிலிடும் பணிக்கு காவலர் விண்ணப்பம்!