ETV Bharat / state

கடன் தவணை வசூலிக்க இடைக்காலத் தடை: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் - நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி குற்றவியல் நடவடிக்கை

மதுரை: கடன் தவணைகளை வசூலிக்க இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Interim injunction to collect loan installments: Notice to the Governor of the Reserve Bank

author img

By

Published : Aug 13, 2020, 4:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கரோனா ஊரடங்கால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் தவித்துவருகின்றனர். இதனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27ஆம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் வரை அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவை அமல்படுத்த முடியாது என நேரடியாகவே சொல்கின்றன. பல நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கோரி அனுப்பும் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் அப்படியே வைத்துள்ளன.

வேறு சில நிதி நிறுவனங்கள் கடன் தவணை சலுகை கேட்டு விண்ணப்பிக்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றன. கடன் தவணை செலுத்த தவறியதால் பல நிதி நிறுவனங்கள் கடன் பெற்று வாங்கிய இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டவை. ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்காமல் அமல்படுத்த வேண்டும். தவறும் நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே கடனுக்கான தவணை செலுத்த கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவும், உத்தரவை மீறி கடன் தவணையை வசூலித்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

அதுவரை ரிசர்வ் வங்கி உத்தரவுபடி கடன்தாரர்களிடம் இருந்து கடனுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.