மதுரை: தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகளின்படி நகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கிராமப்புற பகுதிகளிலும், தனியார் கட்டட சுவர்களில் கட்டிட உரிமையாளர்களின் அனுமதி பெற்றும் சுவர் விளம்பரம் செய்ய வேண்டும்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகளின் மாநாடு, தலைவர்களின் பிறந்தநாள், கட்சி விழாக்கள் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பாலங்களின் தடுப்புச் சுவர்கள், சாலையின் மையத் தடுப்புச்சுவர்கள், அரசு கட்டிடங்கள் என பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு இருந்தன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: டிடிவி, கமலுடன் மூன்றாவது கூட்டணியா?