ETV Bharat / state

'பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு' கவிஞர் வைரமுத்து - madurai district news

பூஜ்ஜியம் என்பது சாதாரண இலக்கம் அல்ல, பூஜ்ஜியத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த பெருமை இந்தியாவிற்கு உண்டு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

India is proud to have invented zero says tamil poet vairamuthu
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு' கவிஞர் வைரமுத்து
author img

By

Published : Apr 22, 2021, 9:41 AM IST

மதுரை: மதுரையில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து பங்கேற்றுப் பேசினார். அப்போது, "பூஜ்ஜியம் என்பது சாதாரண இலக்கம் அல்ல, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு என்பதுதான் இந்தியாவிற்கு பெருமை. மனிதகுல வரலாற்றில் ஒரு விடுபடுதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கரோனா தொற்று சரித்திரத்தில் ஒரு ஆண்டையே விடுபட செய்துள்ளது.

இந்த தொற்று நோயால் 172 நாடுகளில் 100 கோடி மாணவர்கள் கல்வியிலிருந்து விலகி உள்ளனர். இந்த 100 கோடி மாணவர்களால் நாளைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எத்தனை கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் இந்தச் சமூகத்தை விட்டு ஒதுங்கி உள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாது. உலகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தக் கரோனா தொற்றால் கொள்ளையடிக்கப்பட்ட காலங்களை மீட்டுக் கொடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ஒரு கல்வி நிறுவனம் இந்த இழந்த நாட்களை அறிவாற்றலால் மாணவர்களுக்கு மீட்டுக் கொடுத்தால் அப்போதுதான் ஒரு கல்வி சர்வதேச ஆற்றலைப் பெறும். அனைத்து மனிதனும் வெளியே மனிதத் தோல் கொண்டவனாக இருந்தாலும், மனதளவில் மிருகத் தோல் கொண்டவனாக உள்ளான். அவனை கல்விதான் மாற்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: அரக்கோணம் இரட்டைக் கொலை: மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்-திருமாவளவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.