அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு சர்க்கரை கலந்து காய்ச்சிய பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இக்கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது இல்லை. அதற்கு பதிலாக மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதேபோல் திருப்பரங்குன்றம் கோயிலிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தோறும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு வரை சர்க்கரை கலந்து காய்ச்சிய பால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்து அறநிலையத் துறை ஆணையர் அனுமதியின் பேரில் இன்று முதல் பக்தர்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் பால் ஆபத்தானதா?