சுதந்திர தினமான நேற்றும் (ஆக.15) முழு ஊரடங்கை முன்னிட்டு இன்றும் (ஆக.16) மதுபானக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்து உள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கல்லுமேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்வதாக சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல் துறையினர் கல்லுமேடு பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது போஸ் (67) என்பவர் குப்பைமேட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிலைமான் காவல் துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில் விற்பனை செய்த போஸ்யை கைது செய்து, குப்பைமேட்டில் பதுக்கிவைத்திருந்த 920 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க...காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது