ETV Bharat / state

100 மாமன்ற உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே கலந்து கொண்ட மதுரை மாநகராட்சிக் கூட்டம் - மதுரை

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தொடரில் 100 உறுப்பினர்களில் வெறும் 13 பேர் மட்டுமே பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.

In Madurai Municipal Corporation meeting Only 13 out of 100 members participated its create controversial
100 மாமன்ற உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே கலந்து கொண்ட மாநகராட்சி கூட்டம்
author img

By

Published : May 23, 2023, 11:48 AM IST

100 மாமன்ற உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே கலந்து கொண்ட மாநகராட்சி கூட்டம்

மதுரை: 100 உறுப்பினர்களைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் வெறும் 13 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மதுரை மாநகராட்சியின் 18ஆவது மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நேற்று மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு அமைப்பதற்கு நிலம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாமன்றத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும், தெரு நாய்கள் அடிக்கடி பொதுமக்களை கடிப்பதாகவும், சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றித் திரிவதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் கால்நடைகள் மற்றும் நாய்களை விரைந்து பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் நடந்து முடிந்த மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு நபருக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஐந்து பாஸ் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

அதற்கு மாநகராட்சி ஆணையர் வரும் காலங்களில் கூடுதலாக பாஸ் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நான்கு மணி நேரத்துக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றது. மாமன்றக் கூட்டத் தொடரில் இறுதியாக 100 மாமன்ற உறுப்பினர்களில் வெறும் 13 மாமன்ற உறுப்பினர்களே இருந்தனர்.

மக்களின் குறைகள் குறித்து மாமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வெளியேறி உள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முடிவடையும் முன்பாகவே வெளியேறியதால் ஆத்திரமடைந்த மேயர், மக்களுக்காக மாதம் ஒருமுறை நடக்கும் மாமன்றக் கூட்டத்தில் மூன்று மணி நேரம் கூட உறுப்பினர்களால் அமர முடியவில்லை. இனி வருங்காலங்களில் மாமன்ற உறுப்பினர்கள் முழு மாமன்றக் கூட்டம் முடியும் வரை இருக்கும் வகையில் முடிவு எடுக்க வேண்டும் எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள மதுரை மாநகராட்சி மாமன்றத்திலே உறுப்பினர்கள் வராததைக் கண்டிக்கும் வகையில் மேயர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.