மதுரை திருமங்கலம் நகர் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலியாக பீடிகள் தயார் செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
![tobacco](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-illegally-tobacco-sales-issue-visual_15122020123812_1512f_1608016092_882.jpg)
இந்தத் தகவலின் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் குடோனில் பதுக்கி வைத்து குட்கா, பான் மசாலா போலி பீடிகள் தயாரித்தும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
![tobacco](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-illegally-tobacco-sales-issue-visual_15122020123812_1512f_1608016092_273.jpg)
இதனையடுத்து காவல் துறையினர் கண்ணனை கைது செய்து அவரது குடேனிலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, போலி பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.