ETV Bharat / state

‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ - அதிமுக குறித்து ஹெச்.ராஜா இலைமறை

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம், ஆனால் அதுவரை அத்தையை அத்தை என்றே கூப்பிடுகிறோம் என்று அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஹெச்.ராஜா பேசி உள்ளார்.

‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ - ஹெச்.ராஜா இலைமறை!

author img

By

Published : Mar 19, 2023, 9:56 PM IST

மதுரை: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று (மார்ச் 19) வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, “கடந்த இரண்டு நாட்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றியோ மற்றும் மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியது அனைத்துமே பத்திரிகையாளர்களைச் சந்தித்து கூறாத விஷயங்கள்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

அவை கசிந்த வார்த்தைகளேத் தவிர, அவர்கள் முறையாக கூறியது அல்ல. எனவே இதை பொருட்படுத்த வேண்டாம். கூட்டணி பற்றியோ, வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது. கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் மத்தியில் அறிவிக்கும் முடிவுதான் இறுதியான முடிவு. பாஜகவின் ஆதரவாளர்களும் சரி, தொண்டர்களும் சரி, முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக் கதைகளை பரப்ப வேண்டாம்.

திமுக தொண்டர்களை திமுக அமைச்சர்கள் கல்லைக் கொண்டு அடிப்பது, தலையில் அடிப்பது என்றுதான் செயல்படுகிறார்கள். இப்போது நடைபெறும் திமுகவின் ஆட்சி, கேங்ஸ்டர் ஆட்சி என்று குறிப்பிடும் அளவில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், இனி ஒரு கட்சியாக தமிழ்நாட்டில் இருக்காது. திமுகவின் மரபணு மொத்தமாக மாறிப் போய் இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி என்பது, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம்.

ஆனால் அதுவரை அத்தையை அத்தை என்றே கூப்பிடுகிறோம். இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி, சக்கரிய பூத் உருவாக்குவது மட்டுமே. எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருக்கிறோம்” என கூறினார். முன்னதாக கடந்த மார்ச் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தால், தலைவர் பதவியில் இருந்து விலகி சாதாரணத் தொண்டனாக கட்சிப் பணியை செய்வேன்” என தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கூட்டணி குறித்து பேசுவதற்கு எனக்கு எந்த அதிகாரமும் தற்போது இல்லை. அதற்கான நேரம் வரும்போது பாஜக மாநிலத் தலைவர் என்கிற முறையில் நான் பேசுகிறேன். நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி அல்ல” என தெரிவித்தார்.

மேலும் சமீப காலமாக அதிமுக - பாஜக உடனான கருத்து மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பதும், அதிமுக தரப்பில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூறி வருவதும் வழக்கமாக உள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.