மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “சங்ககாலத்தில், 2ஆம் நூற்றாண்டில் வசித்த பெண் புலவர் குறமகள் இளவெயினி, அக்காலத்தில் 15க்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
புறநானூற்றில் இவர் தமிழ் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவர் என குறிப்புகள் உள்ளன. தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை கருத்தில்கொண்டு, குறமகள் இளவெயினி என்ற பெண் புலவரின் பாடல்கள் 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காகவும், வருங்கால தமிழ் சமுதாயம் அடையாளம் காணும் வகையில் இவருக்கு மதுரையில் சிலை அமைத்து, நூலகத்துடன் கூடிய மணிமண்டபமும் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'காலகேயனின் கிளிக்கி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்' - கார்க்கியின் இணையதளத்தை வெளியிட்ட ராஜமெளலி