ETV Bharat / state

சிலை கடத்தல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இந்தியர் பிணை கோரிய வழக்கில் தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai
madurai
author img

By

Published : Sep 22, 2020, 2:57 PM IST

அமெரிக்கா, நியூயார்க் நகரத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சிலை கடத்தல் சம்பந்தமாக என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வாழ் குடியுரிமை பெற்றுள்ளேன். இந்த நிலையில் "Art of Past" என்ற தலைப்பில் சிலை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் வைக்கப்பட்டதாக தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சொந்த வேலை காரணமாக ஜெர்மனி சென்றிருந்தபோது "Red Corner Notice" மூலம் 2011ல் ஜெர்மனி காவல் துறையினர் என்னை கைது செய்தனர். 2012ஆம் ஆண்டு இந்திய காவல் துறையினரிடம் என்னை ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 30 சாட்சியங்களை தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறை விசாரணை செய்துள்ளனர்.

என் மீது நான்கிற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 71 வயது ஆகிய எனக்கு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போதுவரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு என்னைத் தவிர அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு சிலை தடுப்பு மற்றும் கடத்தல் பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.