ETV Bharat / state

மதுரையில் ஏழு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள்… ஆர்டிஐயில் தகவல்... - மதுரை மாநகருக்கு அவசியமாக உள்ளது

மதுரை மாநகரின் போக்குவரத்து சிக்கலை தீர்க்க ஏழு முக்கிய சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாநகரின் ஏழு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள்

author img

By

Published : Sep 29, 2022, 7:00 PM IST

மதுரை மாநகரின் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பல சந்திப்புகளில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டன. இருப்பினும் மக்கள் தொகைக்கு ஏற்ப மேலும் பாலங்கள் மதுரை மாநகருக்கு அவசியமாக உள்ளது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் மதுரையில் அமையவுள்ள மேம்பாலப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியிருந்தார். அதற்கு பொது தகவல் அலுவலர் பதிலளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் அமையவிருக்கும் மேம்பால பணிகளுக்கான திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், இப்பணி முடிவுற்றவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று நெல்பேட்டை தொடங்கி அவனியாபுரம் புறவழிச்சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட உள்ள உயர்மட்ட பாலத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிம்மக்கல் யானைக்கல் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட விரிவான அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை ஆவின் சந்திப்பிலிருந்து அப்போலோ சந்திப்பு வரை உருவாக்கப்படவுள்ள உயர்மட்டப் பாலம் அப்போலோ சந்திப்பையும் கடந்து அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஆர்டிஐயில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை
மதுரை

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான சிம்மக்கல், கோரிப்பாளையம், நெல்பேட்டை, பெரியார் நிலையம் ஆகிய பகுதிகளில் உயர்மட்டப் பாலம் அமையும் பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் என்பதால், அதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரால் மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் அமையுள்ள உயர்மட்ட பாலங்கள் குறித்து இணைந்து கூட்டு தள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை பாண்டிகோவில் கப்பலூர் சாலையில் உள்ள வலையங்குளம் சந்திப்பில் உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.