ETV Bharat / state

தலைமையாசிரியர் மீது குண்டாஸ் - ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றக்கிளை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக, பள்ளி தலைமையாசிரியர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.

தலைமையாசிரியர் மீது குண்டாஸ் - ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்

author img

By

Published : Jan 13, 2023, 10:54 PM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர், தாமஸ் சாமுவேல் இவர் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவிகள் அளித்தப் புகாரின் அடிப்படையில் இவரை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட போலீசார், இவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இவரது தாயார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜரானார்.

இந்த வழக்கில் 30 அரசு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன, 19 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் விதிமுறைகளை பின்பற்றி முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது எனல் கூறி இவர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் மீதான குண்டர் சட்டம் சட்டவிரோதமாக கருத முடியாது என்று கூறி குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

பாதிக்கப்பட்ட ஒன்பது மாணவிகள் தரப்பில் ஒரு தாய் புகார் அளித்ததின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்; எனவே குண்டர் தடுப்பில் கைது சட்டவிரோதம் இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க:துப்பாக்கி சுடுவதில் முதலிடம்... அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல்துறை அபாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.