ETV Bharat / state

நிலம் கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை உயர்நீதிமன்றம்

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தும் இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி நில கையகப்படுத்துதல் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Aug 8, 2022, 9:31 PM IST

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணி, தர்மராஜ், பட்டுத்துறை, அருள்வேல், கணேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக கையாளும் விதமாக கண்ணடியான் கால்வாய் வழியாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக திட்டத்தை கொண்டு வந்தது.

இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்படவில்லை, மற்றும் மாற்று வழி குறித்தும் பரிசீலிக்கப்படவில்லை, ஆகிய இரு காரணங்களை குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அரசு இதழ்களும் தமிழக அரசின் வரம்புக்குட்பட்டது. அதேபோல நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அருகில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாற்றிடமாக பரிசீலித்துள்ளனர்.

ஆனால் அவ்வழி பொருத்தமானதாக அமையாது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மனுதாரர்கள் தங்களது நிலத்தை வழங்காத காரணத்தினாலேயே அதை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தும், இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸில் குட்டி தூக்கம்போட்ட பூனை; பார்த்து சிரித்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.