ETV Bharat / state

இரண்டு படங்கள் நடித்துவிட்டால் கலைமாமணியா...? - நீதிபதிகள் கேள்வி - சிவகார்த்திகேயன்

இரண்டு படங்கள் நடித்தவர்கள், கலை பற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கெல்லாம் கலைமாமணி விருது வழங்குவதா என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இரண்டு படங்கள் நடித்து விட்டால் கலைமாமணியா...? - மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Nov 18, 2022, 4:50 PM IST

மதுரை: 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத் தலைவர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற உறுப்பினர், செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாட்டுத் துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலைமாமணி விருது 5 பிரிவின்கீழ் வழங்கப்படுகிறது. 18 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, எந்தவிதத் தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை. 2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்பப்பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, 2019 - 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2021ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகன் பாண்டி, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

அப்போது நீதிபதிகள், “கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களைத் தேர்வு செய்கிறீர்கள்? விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைத்துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருது தற்போது 2 படங்களில் நடித்துவிட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலையில் உள்ளது’ என வேதனைத் தெரிவித்தனர்.

2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத் தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் நவ.28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு, நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகிய பலருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.