ETV Bharat / state

மாணவிகளிடம் அத்துமீறி கைதான ஆசிரியருக்கு ஜாமீன் : உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு - போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்

மாணவிகளிடம் அத்துமீறிய வழக்கில் அறிவியல் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவளித்துள்ளது.

போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் : உயர்நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : May 3, 2022, 10:33 PM IST

மதுரை: மேலூர் அருகேயுள்ள மணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர், பாரதி(40). இவர், மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், ஆசிரியர் பாரதியை சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரிய ஆசிரியர் பாரதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மாணவிகள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை என வாதிடப்பட்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர், ”மனுதாரர் மது அருந்தி பள்ளிக்கு வந்துள்ளார். மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியது குறித்து 21 மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர் " என்றார்.

இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் மார்ச் 13 முதல் சிறையில் உள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையும் முடிந்துள்ளது. எனவே, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினசரி காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஸ்கூட்டி ஓட்டிய காதலி - செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.