ETV Bharat / state

டெல்லி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்

டெல்லியில் இருந்து கும்பகோணத்திற்கு வங்கி பணிக்காக வந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு சாகும் வரை சிறையில் இருக்க கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court confirmed life imprisonment for Delhi woman rape case criminal

author img

By

Published : Mar 4, 2023, 12:05 PM IST

மதுரை: சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு சட்டங்கள் மாறுதல் செய்யப்பட்டும், புதிதாக பல சட்டங்கள் இயற்றப்பட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. பாலியல் தொல்லையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது முன்வந்து புகார்கள் அளிக்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் வைக்கப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது விரைந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அப்படி வழங்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து குற்றவாளிகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து வழக்குகளில் இருந்து தப்பி வெளிவந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் உயர் நீதி மன்ற மதுரைக்கிளையில் பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு பாராட்டைப் பெற்று வருகின்றது.

டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2018ல் கும்பகோணம் வங்கி பணிக்கு வந்தார். சென்னையில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தவர் நள்ளிரவு என்பதால் ஓட்டலில் தங்குவதற்காக ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். ஓட்டலில் இறக்கிவிடாமல் பாதி வழியில் அந்தப் பெண்ணை ஆட்டோ டிரைவர் இறக்கி விட்டுள்ளார்.

இதனால் சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணை அவ்வழியாக டுவீலரில் வந்த வசந்தகுமார், தினேஷ் குமார் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அவர்களது நண்பர்கள் புருஷோத்தமன், அன்பரசுவையும் வரவழைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு மற்றும் ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய 4 பேரும் மரணம் அடையும் வரை சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததும் தீர்ப்பளித்தது.

கீழமை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி தீவிரமான குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதால் அவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனை 3 ஆண்டாக குறைக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கிருஷ்ணகிரி எஸ்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.