ETV Bharat / state

பெண் பயணியிடம் தவறாக நடந்த காவலர்; சிசிடிவி பொருத்த ரயில்வேக்கு பரிந்துரை!

மதுரை: பெண்கள், முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் (தனியறைகளில்) சிசிடிவிகளைப் பொருத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்வதற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பிக்பாஸ் அரங்குகளாய் மாறப்போகும் ரயில் கம்பார்ட்மெண்டுகள்
author img

By

Published : Aug 1, 2019, 10:42 PM IST

Updated : Aug 1, 2019, 11:00 PM IST

திருச்சி ரயில்வே காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்த வினோத் என்பவர், 2014 டிசம்பரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், கோடை ரோடு முதல் திருச்சி வரை பெண் காவலர் ஒருவருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த வினோத், அங்கிருந்த பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் பேசியதால், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 2015ஆம் ஆண்டு வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி வினோத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், காவலர் வினோத் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யபட்டதால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து, "பெண்களின் மீதான பாலியல் தொந்தரவு பெருகி வரும் சூழ்நிலையில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர், இனி ரயில்களில் பயணிக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில் கம்பார்ட்மெண்டில் சிசிடிவிகளைப் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Intro:பெண்கள், முதியோர்,
பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில்,  ரயில் கம்பார்ட்மெண்டுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:பெண்கள், முதியோர்,
பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில்,  ரயில் கம்பார்ட்மெண்டுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

*பெருகி வரும் வேலை வாய்ப்புகளினால், பேருந்துகள், ரயில்கள், விமானம் போன்றவற்றில் தனியாக செல்ல வேண்டி உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு .*

திருச்சியைச் சேர்ந்த வினோத், 2008ம் ஆண்டு திருச்சி ரயில்வே காவல் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 2014 டிசம்பரில் தேதி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், கொடை ரோடு முதல் திருச்சிராப்பள்ளி வரை பெண் காவலர் ஒருவருடன ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பெண் பயணி ஒருவரிடம் முறையற்ற வகையில் பேசியதாக, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் படி 2015 ல் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் உறுதி செய்தார்.

இதனை ரத்து செய்யக்கோரி வினோத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம்,
" இந்த வழக்கு பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவருடன் பணியாற்றிய பெண் காவலரும் காவலர் வினோத் அன்று மது அருந்தி இருந்ததாகவும் பெண்களிடம் முறையற்ற வகையில் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இவை காவலர் வினோத் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்ய போதுமானவையாக உள்ளன . ஓடும் ரயிலில் பெண் பயணி, காவலர் ஒருவரால் தொந்தரவிற்கு ஆளானது மிகவும் மோசமான குற்றம். அது தெரிந்தவுடன் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு தொந்தரவு  அளித்தது மன்னிக்க முடியாத குற்றம். காவலர் ஒருவரால் பெண் பயணிக்கு இதுபோன்று தொந்தரவு அளிக்கப்படும் போது சக பயணிகள் உதவுவதில் தயக்கம் காட்டவே செய்வர்.

ஆகவே ஓடும் ரயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது சந்தேகத்திற்கு இடமில்லாதது என்பதோடு அவசியமான  ஒன்றாகவும் உள்ளது.

பெருகிவரும் வேலைவாய்ப்பு காரணமாக பெண்கள் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றில் தனியே பயணம் செய்வது இயல்பான ஒன்றாக உள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். 

பல நாடுகளில் பேருந்துகள்,  ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. அது போன்ற கொள்கை தென்னக ரயில்வேயிலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம். 

இதுபோன்ற புகார்கள் எழும் நிலையில் அவற்றை உறுதிசெய்ய சிசிடிவி காட்சிகள் பெருந்துணை புரியும். இதனால் தவறிழைத்தவர்கள் தப்பிக்காமல் தண்டனை பெறுவதை உறுதி செய்யலாம்.

சமீப காலமாக  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும நிலையில், ரயில்களில்  இரவு நேரங்களில் இது போன்ற தொல்லைகள் எழுவதாக புகார்கள் எழுகின்றன. ஆகையால், இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர், ரயில்களில் பயணிக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில்,  ரயில் கம்பார்ட்மெண்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய  வேண்டும்.

 ஓடும் ரயில்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு, பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக வழிகாட்டுதல்களை  பிறப்பிக்க வேண்டும்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே விரைவாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.Conclusion:
Last Updated : Aug 1, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.