ETV Bharat / state

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் அச்சுறுத்தலா? - ஆராய குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு - மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

குடிநீர் தொட்டியை ஆராய்வதற்கு நீதிமன்றம் ஒன்றும் நிபுணர்கள் குழு அல்ல எனவும், பழுதடைந்துள்ளதாக கூறி இடிக்க உத்தரவிடக் கோரிய நீர்த்தேக்க தொட்டியை ஆராய வல்லுநர்கள் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரையின் படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc-madurai-directs-on-plea-seeking-demolition-of-overhead-water-tank-at-rs-mangalam
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் அச்சுறுத்தலா? - ஆராய குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 8:53 PM IST

மதுரை: இயற்கையாக கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் அரசு அதிகாரிகள் அதிக அக்கறை கவனம் செலுத்த வேண்டும் எனவும் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் குழு அல்ல. எனவே, தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வு அறிக்கைப் படி அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யத் தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் மிகவும் சேதமடைந்து காணப்படும் நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட உத்தரவிடக் கோரி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் முழுவதும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டி குடிநீர். விநியோக செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர் தேக்கத் தொட்டி, கடந்த 99 ஆம் ஆண்டு கட்டப்பட்டது தற்போது மிகவும் சேதமடைந்து கீழே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தொட்டி கீழே விழும் நிலையில் அருகில் அரசுப்பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள், உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அபாயகரமான நிலையில் உள்ள 4 மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளை இடித்து புதிய நீர்த் தொட்டிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (டிச.11) விசாரணை செய்யப்பட்டு இறுதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 'இயற்கையாக அரசு அதிகாரிகள் கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் அல்ல.

நீர்நிலை தொட்டியின் உறுதித் தன்மையை ஆராய்க: எனவே, அரசு அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் வைத்து நீர்நிலை தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் அவர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் புரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் ஒருவேளை உறுதித் தன்மை நன்றாக இருந்தால் நீர்த்தேக்க தொட்டியை இடிக்கத் தேவை இல்லை.

எனவே, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து தொட்டிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் சான்றளிக்க வேண்டும். இதுவரை நீர்த்தேக்க தொட்டியைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்யவில்லை என்றால், மூன்று மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை பெற வேண்டும் ஆய்வு அறிக்கையின் படி, அரசு உரிய முடிவு எடுக்கலாம்' எனக் கூறி வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.