ETV Bharat / state

மினி கிளினிக் பணியாளர் நியமன வழக்கு: ஜனவரி11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - மினி கிளினிக் பணியாளர் நியமனம் வழக்கு

மதுரை: தமிழ்நாட்டில் இரண்டாயிரம் மினி கிளினிக்களுக்கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மினி கிளினிக் பணியாளர் நியமனம் வழக்கு
மினி கிளினிக் பணியாளர் நியமனம் வழக்கு
author img

By

Published : Jan 5, 2021, 1:57 PM IST

மதுரையை சேர்ந்த வைரம் சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் இரண்டாயிரம் மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை 2020 டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14 ஆயிரமும், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6000 வழங்கப்படுவதாக உள்ளது.

தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள 2000 மினி கிளினிக்களுக்காக 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்காக சுகாதாரத்துறை இயக்குனர் 2020 டிசம்பர் 15ஆம் தேதி பணியாளர் நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை.

கரோனா வைரஸ் தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே, சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய 2020 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பாக வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கால அவகாசம் அளிப்பதாக கூறி மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...தைப்பூசத் திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.