ETV Bharat / state

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: ''கக்கூஸ்'' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

hc-dismisses-case-against-documentary-film-director-divya-bharathi
author img

By

Published : Nov 20, 2019, 10:54 PM IST

மதுரை ஆனையூரைச் சேர்ந்த திவ்யா என்ற திவ்யபாரதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வழக்கறிஞர் பாஸ்கர் என்பவர் மதுரம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில், கக்கூஸ் ஆவணப்படம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், இரு சமூகங்களிடையே சாதிக்கலவரங்களை தூண்டும் விதமாக இருப்பதாகவும் அதைத் தயாரித்து வெளியிட்ட என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகாரளித்துள்ளார்.

அதனடிப்படையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தவறானது. நான் வழக்கறிஞர் படிப்பை முடித்த நிலையில் பதிவு செய்வதற்காக காத்துள்ளேன். சமூக அக்கறை கொண்டு, அதற்கு எதிரானவற்றிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன். குறிப்பாக கையால் மலம் அள்ளும் முறையை அகற்ற அதிக முனைப்போடு போராடி வருவதோடு, அப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான நிவாரணங்களையும் பெற்றுத் தந்து வருகிறேன். 21 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லை.
எனவே மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே அந்த குறும்படத்தைத் தயாரித்து இயக்கினேன். அத்தொழிலில் ஈடுபடுவர்களில் பெரும்பாலானவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என அரசின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தவறான நோக்கில் குறும்படத்தில் நான் பதிவு செய்யவில்லை. எனவே என் மீதான குற்றச்சாட்டு தவறானது. அதற்கு போதிய முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்யவும், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும், இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என்றார். இந்த வழக்கு ஏற்கனவே வந்தபோது திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் .

இதையும் படிங்க: முரசொலி விவகாரம்: ’பொய்யுரைப்போர் முகமூடியைக் கிழித்தெறிவோம்’ - கொதிக்கும் ஆர்.எஸ். பாரதி

Intro:கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது ஆவணப்படம் தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது ஆவணப்படம் தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை ஆனையூரைச் சேர்ந்த திவ்யா@திவ்யபாரதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,” வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில்,” கக்கூஸ் ஆவணப்படம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இழிவு படுத்தும் நோக்கத்துடனும், இரு சமூகங்களிடையே சாதிக்கலவரங்களை தூண்டும் விதமாகவும் இருப்பதாகவும் அதைத் தயாரித்து வெளியிட்ட என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்” புகாரளித்துள்ளார்.

அதனடிப்படையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தவறானது. நான் வழக்கறிஞர் படிப்பை முடித்த நிலையில் பதிவு செய்வதற்காக காத்துள்ளேன். சமூக அக்கறை கொண்டு, அதற்கு எதிரானவற்றிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன். குறிப்பாக கையால் மலம் அள்ளும் முறையை அகற்ற அதிக முன்னெடுப்போடு போராடி வருவதோடு, அப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரணங்களையும் பெற்றுத் தந்து வருகிறேன். 21 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே அந்த குறும்படத்தை தயாரித்து இயக்கினேன். அத்தொழிலில் ஈடுபடுவர்களில் பெரும்பாலானவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என அரசின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தவறான நோக்கில் குறும்படத்தில் நான் பதிவு செய்யவில்லை. எனவே என் மீதான குற்றச்சாட்டு தவறானது, அதற்கு போதிய முகாந்திரம் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்யவும், இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் , இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என கூறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே வந்தபோது திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.