ETV Bharat / state

தமிழனுக்கு தண்ணீர் தர மாட்டியா? - ஹெச்.ராஜா காட்டம் - press meet at nmadurai

மதுரை: தமிழ்நாட்டில் தமிழனுக்கு தண்ணீர் தர மறுப்பதா என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

h raja
author img

By

Published : Jun 23, 2019, 6:28 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக என்ற சுயநலவாத அமைப்பு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீர் மேலாண்மை அழிந்து, நீர் வளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ்நாட்டின் சரிவு தொடங்கியது. கருணாநிதிதான் அனைத்திற்கும் காரணம் என்றார்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

மேலும், வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதற்கு, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு தண்ணீர் தர மறுப்பதா எனவும் ஹெச். ராஜா மிக காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, திமுக என்ற கோர முகம் கொண்ட கட்சியை தமிழ்நாடு மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக என்ற சுயநலவாத அமைப்பு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீர் மேலாண்மை அழிந்து, நீர் வளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ்நாட்டின் சரிவு தொடங்கியது. கருணாநிதிதான் அனைத்திற்கும் காரணம் என்றார்.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

மேலும், வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதற்கு, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு தண்ணீர் தர மறுப்பதா எனவும் ஹெச். ராஜா மிக காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, திமுக என்ற கோர முகம் கொண்ட கட்சியை தமிழ்நாடு மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Intro:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் திருமண நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்டார்.Body:வெங்கடேஷ்வரன்
மதுரை
23.06.2019





மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் திருமண நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்டார்.

*பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறும்போது*

திமுக என்ற சுயநலவாத மக்கள் விரோத சக்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீர் மேலாண்மை நீர் வளங்களை பாதுகாப்பது என்ற கொள்கையை மறந்து கண்மாய்கள் புறம்போக்கு கால்வாய் புறம்போக்கு ஆக்கிரமித்து கடைகள் வீடுகள் கட்டி சட்டவிரோதமாக ஆட்சி நடத்தி ஒரு பொறுப்பற்ற ஆட்சி ஏற்பட்டதிலிருந்து தமிழகத்தில் சரிவு துவக்கம் என பல ஆண்டுகளாக கூறி வருகிறேன்.

அதனால் தான் இந்த நீர் பிரச்சனை தமிழகத்தில் உள்ள காவிரியை வற்ற விட்ட பாவிகள் யார் கருணாநிதிதான் ஏன் என்றால் சட்டமன்றத்தில் மார்ச் மாதத்தில் 6ஆம் தேதி 1970-ல் கருணாநிதி கூறுகிறார் ஹேமாவதி ஹேரங்கி என்ற அணைகளை கர்நாடகா கட்டிக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று இதைவிட மிகப் பெரிய பாவச்செயல் தமிழ் நாட்டில் உண்டா.

அடுத்ததாக கருணாநிதி அவர்கள் சென்னைக்கு செய்த புண்ணியம் என்னவென்றால் கண்மாயின் மேல் வள்ளுவர் கோட்டம் கட்டிய பாவம் தான்.

அதேமாதிரி இன்றைக்கு பல கல்லூரிகள் அது கல்லூரிகள் இல்லை வியாபார ஸ்தலங்கள் அது அனைத்தும் ஏரிகளின் மேலே இருக்கிறது மழை பெய்தாலும் தேவையான தண்ணியை சென்னையில் தேக்கி வைப்பதற்கு ஏரிகள் இருக்கிறதா? தமிழ்நாடு முழுக்க அப்படித்தான் இருக்கிறது எனவே திமுக மாயையிலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கு திக திமுக என்ற இரண்டு அமைப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் தமிழனுக்கு நல்லதே நடக்காது.

நேற்று துரைமுருகன் ஊடகங்களில் கூறியிருக்கிறார் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போனாள் போராட்டம் வெடிக்கும் என்று உள்ளூரில் இருக்க சக தமிழனுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் ஆனால் எங்கேயோ இருந்து கூவுகிறார்கள்.

இன்னொரு தகவல் கூறுகிறார்கள் அருவி என்ற அமைப்பு அங்கு இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட பாட்டிலில் அடைத்து ஜோலார்பேட்டையில் இருந்து வெளியே போகக்கூடாது யாரை ஏமாற்றுகிறார்கள் ஹிந்து பள்ளிக்கூடம் நடத்துவீர்கள் அதில் காசு சம்பாதிப்பீர்கள் அதன் மூலம் வயிறை நிரப்புவீர்கள் ஒரு லட்சம் இரண்டு லட்சம் வாங்கிய ஹிந்து சமஸ்கிரதம் ஆகியவை கற்றுக் கொடுத்தீர்கள் ஆனால் ஏழை எளிய மக்கள் இஷ்டப்பட்டால் அரசு பள்ளிக்கூடத்தில் ஹிந்தி படிக்கலாம் என்றால் மத்திய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவீர்கள்.

இது எல்லாத்துக்கும் அடிக்கல் நாட்டியது 67 திமுக ஆட்சியில் தான் ஆகவே தமிழக மக்களுக்கு என்னுடைய அறைகூவல் இந்த திமுக என்ற தீய சக்திகளை தமிழகத்தில் இருந்து வேரோடு விரட்டி துடைத்தெறிய வேண்டும்.

மத்திய மாநில அரசாங்கம் தண்ணீர் பிரச்சினைக்காக தீர்வுகளை அறிவித்துள்ளது இந்த குடிநீர் பிரச்சனையை மத்திய அரசும் மாநில அரசும் இரண்டாகப் பிரித்து ஒன்று நீண்ட நாட்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருப்பது நீர்நிலைகளை காப்பாற்றுவதும்.

திமுக பாரம்பரியம் என்பது கண்மாய்களை ஆக்கிரமிப்பது புறம்போக்குகளை ஆக்கிரமிப்பது அந்த கட்சியை அப்படித்தான் இருக்கிறது அதில் இருந்து தமிழ் நாட்டை மீட்க வேண்டும்.

ஆனால் உடனடியாக தண்ணீர் எங்கு இருக்கிறதோ அங்கு இருந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு போக வேண்டும்.

துரைமுருகன் என்ன சொல்லி இருக்ககிறார். நான் என்னுடைய அறிவி நிறுவனத்திலிருந்து ஒரு தண்ணீர் கூட விற்க மாட்டேன் அனைத்தும் சென்னையில் தண்ணீருக்கு தவிக்கும் மக்களுக்கு அனுப்பி விடுவேன் என்று சொல்லியிருந்தால் இவர் தமிழ்நாட்டில் அரசியலில் இருப்பதற்கு லாயக்கானவர் ஆனால் அவர் என்ன சொல்லியிருக்கிறார் சென்னை மக்களுக்கு தண்ணீர் கொடுத்தால் போராட்டம் வெடிக்கும் என்று கூறுகிறார் அப்படி என்றால் சென்னை மக்கள் சென்னையில் இருக்கும் அவர் வீட்டை காலி பண்ணிவிட்டு ஜோலார்பேட்டை செல்ல வேண்டும் என்று அவர் வீட்டின் முன்னாடி போராட்டத்தில் உட்கார்ந்தால் அவர் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.

ஹிந்தி திணிப்பு என்று யாராவது வாய் திறந்தால் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் 45 பள்ளிக்கூடத்தை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பதிவு செய்து இருக்கிறேன். அனைத்து முன்னாடியும் போராட்டங்கள் நடக்கும் மூட வேண்டும் என்று


துரைமுருகன் அவர்கள் எனக்கு நல்ல நண்பர் தான் ஆனால் இந்த அளவு மனிதாபிமானம் இல்லாமல் கொடூரமாக இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை திமுக கட்சி என்பது கோர முகம் கொண்ட கட்சி.

தமிழக மக்கள் அதை துடைத்தெறிய தயாராக வேண்டும்.

தற்போது இருக்கும் தண்ணீர் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

திருச்சியில் திருநாவுக்கரசரை சுமந்த கஷ்டத்தை பார்த்து இருப்பார் எனக்கு நல்ல நண்பர் நேரு

அவருடைய கருத்தை நான் மதிக்கிறேன்

எப்படி தூக்கி சுமந்தார் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருப்பார் யாரு கண்டா

திருநாவுக்கரசர் வந்து அவர் மட்டும் உட்கார்ந்து சர்வ கட்சி கூட்டம் நடத்தி கலாம் ஏனென்றால் அவர் அனைத்து கட்சிக்கும் சென்று வந்தவர் சுயநலத்திற்காக கட்சி மாறிய நபர்.

திருநாவுக்கரசர் என் முதுகில் சுமக்க விட்டு விட்டீர்களே என்று கோபத்தில் கூறியிருக்கலாம் என எச்.ராஜா கூறினார்.



Visual name : TN_MDU_02_23_H.RAJA BYTE_TN10003

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.