ETV Bharat / state

தேவக்கோட்டையில் விபரீதம்: ஊஞ்சலில் தூங்கிய பாட்டி, பேரன் மீது விழுந்த தூண்! - corona updates

மதுரை: ஊஞ்சலில் உறங்கிய பாட்டி, பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் உயிரிழந்தான்.

யுவராஜ்
யுவராஜ்
author img

By

Published : Apr 18, 2020, 10:17 AM IST

மதுரை மாவட்டம் தேவகோட்டை செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயிலின் ஒரு பகுதியில் அக்கோயிலின் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மனைவி செல்வி (50), அவ்வீட்டிலிருந்த தூணிலும், அருகிலுள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்திருந்தார். விளையாடிவிட்டு களைப்பாய் வந்த அவரது பேரன் யுவன்ராஜ் (6), ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியின் மடியில் படுத்து தூங்கியிருக்கிறான்.

பாரம் தாளாத பழைமையான தூண், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில், படுகாயமுற்ற பாட்டியையும், பேரனையும் மீட்டு, தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி பேரன் யுவராஜ் இறந்தான். பாட்டி செல்வி தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஊரடங்கில், வீட்டுக்குள் முடங்கிய சமயத்தில் நடந்த இச்சம்பவம், தேவகோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவப் பணியாளராக பணியாற்றும் ஸ்வீட் இளவரசி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.