ETV Bharat / state

கடும் நோய்களுடன் போராடிய கர்ப்பிணியை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு! - கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்கள்

மதுரை : கடுமையான நோய்களுடன் போராடிய கர்ப்பிணியை காப்பாற்றிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு, முதல்வர் சங்குமணி பாராட்டு தெரிவித்தார்.

ராஜாஜி மருத்துவமனை
ராஜாஜி மருத்துவமனை
author img

By

Published : Sep 8, 2020, 3:11 PM IST

Updated : Sep 8, 2020, 3:19 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணி ஒருவர் கரோனா தொற்று, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களோடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் பூரண நலத்துடன் ஆண் குழந்தை பிறந்தது.

பல சவாலான நோய்களுடன் போராடி அந்த பெண்ணுக்கு சிறுநீரக துறை இரைப்பை, கல்லீரல் துறை மகப்பேறு ஆகியவை பொது மருத்துவ வல்லுநர்களின் கூட்டுமுயற்சியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில், பிளாஸ்மாபெரசிஸ், ஹீமோ டயாலிசிஸ் போன்ற முறைகளும் கையாளப்பட்டன. தற்போது அந்த கர்ப்பிணி அனைத்து வகை நோய்த் தொற்றிலிருந்தும் பூரண குணமடைந்தார்.

இதையடுத்து மகப்பேறு மருத்துவ துறை தலைவர் மற்றும் பேராசிரியர் சுமதி ஜோதி திவ்யா, சிறுநீரக துறை தலைவர் அருள், குடல் இரைப்பை மருத்துவ பிரிவு துணைத் தலைவர் கண்ணன், மயக்கவியல் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் ஆரோக்கிய மைக்கேல்ராஜ், மருத்துவ பிரிவு துணைத் தலைவர் நடராஜன், விவேகானந்தன் உள்ளிட்ட இந்த குழுவினரை மருத்துவமனை முதல்வர் சங்குமணி பாராட்டினார்.

இதையும் படிங்க: தி.மலையில் புதியதாக 2 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைப்பு!

Last Updated : Sep 8, 2020, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.