மதுரை: கரோனா தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை, விசாரணை சிறைவாசிகள், பெண் சிறைவாசிகள் உள்ளிட்ட 1,524 பேர், சிறைக்காவலர்கள், அவர்கள் குடும்பத்தினர் 262 பேர் என 1,786 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சிறைவளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், கரோனா மூன்றாவது அலை உருவானாலும் அதனுடைய பாதிப்பை தடுக்கும் வகையிலும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கோண்டு வருவதாகவும் மதுரை மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
இது மட்டுமில்லாமல் மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவர் பழனி, மதுரை சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகிய இருவரும் சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் சிறைக் கைதிகளின் நிலை என்ன?